'டேய்.. சாவடிச்சுடுவேன்.. ஓடிடு..' நெட்டிசனிடம் சீறிய நடிகர் சித்தார்த்.. ஏன் இவ்வளவு வெறுப்பு?
சென்னை: நெட்டிசன் ஒருவரை நடிகர் சாவடிச்சுடுவேன் ஓடிடு என்று திட்டியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பழம்பெரும் பாலிவுட் நடிகரான திலீப்குமார் இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.
98 வயதான திலீப்குமார் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலீப்குமார் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

ஆரம்ப கால சினிமா
60 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் கோலொச்சியவர் திலீப்குமார். ஆரம்பகால பாலிவுட் சினிமாவில் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்தவர் திலீப்குமார்.

நடிகர் சித்தார்த் இரங்கல்
இந்நிலையில் திலீப்குமாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

மாபெரும் மரம் விழுந்துவிட்டது
அதாவது, உலகம் அறிந்த மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். ஒரு மாபெரும் மரம் விழுந்துவிட்டது. லெஜன்ட் திலீப்குமார் சாஹேப்பின் ஆத்மாவுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இன்றைய தலைமுறை அவரைப் பற்றி அறிந்து கொண்டாடுகிறது. அவர் என்றென்றும் இருக்கிறார் என பதிவிட்டிருந்தார்.

அக்ஷய்குமார் போன்று..
மேலும் நடிகர் திலீப்குமாரின் இளம் வயது போட்டோ ஒன்றையும் நடிகர் சித்தார்த் தனது பதிவோடு சேர்த்து ஷேர் செய்திருந்தார். சித்தார்த் ஷேர் செய்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர் அக்ஷய்குமார் போன்று இருப்பதாக கூறினார்.

டேய் சாவடிச்சுடுவேன் ஓடிடு
இதனால் கடுப்பான நடிகர் சித்தார்த், அந்த நெட்டிசனின் பதிவுக்கு டேய் சாவடிச்சுடுவேன் ஓடிடு என திட்டி பதிவிட்டுள்ளார். நடிகர் சித்தார்த்தின் கோபமான இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏன் இவ்வளவு கோபம்?
நடிகர் சித்தார்த் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் நடிகர் அக்ஷய் குமார் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் அக்ஷய்குமார் பெயரை குறிப்பிட்டதும் சித்தார்த் கடுப்பாகி விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











