Siddharth: கமல்ஹாசனின் தக் ஃலைப் படத்திலிருந்து விலகிய மற்றொரு ஹீரோ.. என்னதாங்க நடக்குது?
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார். இந்தப் படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது. ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை. அவர் சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தையும் தூசித் தட்டினார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த சூழலில் இந்தியன் 2 மட்டுமில்லாமல் தற்போது இந்தியன் 3 படமும் உருவாகியுள்ளது. படத்தின் நீளம் கருதி, கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இந்தியன் 2 ரிலீஸ்: இந்தப் படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில், கடந்த மாதம் செர்பியாவில் நடக்கவிருந்த படத்தின் சூட்டிங் திட்டமிட்டது போல நடக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் பிரசாரங்கள் காரணமாக இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்காத நிலையில் படத்திற்காக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கொடுத்த கால்ஷீட் வீணானது.
தக் லைஃப் படத்திலிருந்து சித்தார்த் விலகல்?:: இதையடுத்து அவர்கள் இருவரும் படத்திலிருந்து விலகினர். இவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இந்தப் படத்திலிருந்து நடிகர் சித்தார்த்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக காத்திருந்த அவர், தற்போது அதேபோல கால்ஷீட் பிரச்சினையால் படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சித்தா படத்தை தொடர்ந்து தற்போது அவர் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்தார்த்திற்கு பதில் யார்?: மணிரத்னத்தின் உதவி இயக்குநராகத்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் சித்தார்த். தொடர்ந்து ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து தொடர்ந்து வருகிறார். இதையடுத்து மணிரத்னத்தை தன்னுடைய குருவாகவே பார்த்துவரும் சித்தார்த், தன்னுடைய மற்ற படங்களின் கமிட்மெண்ட்டால் தக் லைஃப் படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சித்தார்த்திற்கு பதிலாக படத்தில் யார் இணைவார்கள் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படததிலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் விலகிவருவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











