நெருக்கமாக செல்ஃபி..காதலை உறுதி செய்த சித்தார்த்? கிசுகிசு உண்மை தானா!
சென்னை : சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை சித்தார்த் ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டனர்.
180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டவர் சித்தார்த்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவானத் படம் மகா சமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே, இருவரும் தனிமையில் பேசுவதும், ஜோடியாக வலம் வந்ததால், இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.

பல இடங்களில் டேட்டிங்
அதுமட்டும் இல்லாமல், மகா சமுத்திரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது இருவரும் வெளியூர்களுக்கு ஒரே காரில் தான் ஒன்றாக சென்றனர். பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி பார்ட்டி மற்றும் விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது.

வாய் திறக்கவில்லை
அது மட்டும் இல்லாமல், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர். இருவரும் ஜோடியாக வந்து இறங்கிய போட்டோ இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், காதல் விவகாரம் குறித்து அதிதியும் சித்தார்த்தும் இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்காமல் மௌமாகவே உள்ளனர்.

இதயராணிக்கு
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதுவும் சும்மா பிறந்த நாள் வாழ்த்து மட்டும் செல்லாமல் "இதயராணிக்கு" பிறந்த நாள் வாழ்த்து என்று கூறியுள்ளார். அதாவது Happy Happy Birthday Princess of heart என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலிப்பது உண்மை தானா?
இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பது உண்மை தானா? என்றும் எப்போது திருமணம் என்றும் கேட்டு வருகின்றனர். இன்று 36வது பிறந்த நாளை கொண்டாடும் அதிதி ராவ் ஹைதாரிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாரு வாழ்த்து சொன்னா என்ன சொல்லாட்டி என்ன அவர் சொல்லிட்டாரு அது போதும்பா... என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











