Chithha: என்னை அவமானப்படுத்தினார்கள்..மேடையில் கண்கலங்கிய சித்தார்த்!
சென்னை: இவன் படத்தை யாரு பார்ப்பா, இவன் எல்லாம் ஒரு நடிகனா என்று என்னை அவமானப்படுத்தினார்கள் என்று நடிகர் சித்தார்த் கண்கலங்கி பேசினார்.
சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் சித்தா திரைப்படத்தை, எட்டாகி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது
இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

சித்தா திரைப்படம்: இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஆகியோர் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.
கண்கலங்கிய சித்தார்த்: பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம், ஆந்திராவில் வருகிற 6ம் தேதியன்று வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த் கண்கலங்கி பேசினார். அதில், தமிழில் பிரபல ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டது.
படத்தை புகழ்கின்றனர்: கேரளாவில் கோகுலம் கோபாலன், தன்னுடைய 55 வருட பயணத்தில் இப்படி ஒரு படத்தை பார்த்தது இல்லை என்று கூறி இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிக்கொண்டார். அதேபோல, கர்நாடகாவில், கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்லே தயாரிப்பு நிறுவனம், இப்படம் சிறப்பான படம் பிடித்திருப்பதாக கூறி, அந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியது.
அவமானப்படுத்தினார்கள்: ஆனால் தெலுங்கில் சித்தார்த் படத்தை யாரு பார்ப்பார்கள் என்று கேட்டார்கள். என்னை அவமானப்படுத்தினார்கள். அவர்கள் எல்லாக் கதவையும் மூடிவிட்டனர். ஏசியன் சுனில் மட்டுமே இந்தப்படத்தை வெளியிட முன் வந்தார். இதனை யாராவது எதிர்த்தால், தெலுங்கு பார்வையாளர்களை தவிர்த்து விடுவேன் என்று நடிகர் சித்தார்த் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.


Click it and Unblock the Notifications











