Siddha movie: சித்தா படத்தை பார்த்த கமல்ஹாசன்.. என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க
சென்னை: நடிகர் சித்தார்த் லீட் கேரக்டரில் நடித்துள்ள சித்தா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது சித்தா.
அண்ணன் மகளுக்கு ஏற்படும் துயரமான சம்பவத்தையடுத்து சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

சித்தா படத்தை பார்த்து பாராட்டிய உலகநாயகன்: நடிகர் சித்தார்த் பாய்ஸ் படம் மூலம் சாக்லேட் பாயாகவே தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினார். தொடர்ந்து காதல் மற்றும் ரொமான்சை மையமாக கொண்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகைகளை பெற்றார். தற்போது அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகிவரும் படங்களில் சிறப்பான கேரக்டர்களை பார்க்க முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள சித்தா படம் அவரது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கிய பயணமாக உள்ளது.
இந்தப் படத்தில் அண்ணன் மறைவிற்கு பிறகு தன்னுடைய அண்ணி மற்றும் அவரது மகனை பராமரித்துவரும் சித்தார்த், ஒரு கட்டத்தில் அண்ணனின் மகளுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் என அடுத்தடுத்து விஜய் சேதுபதியை லீட் கேரக்டர்களில் வைத்து படமியக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தன்னுடைய முந்தைய படங்களிலும் அழுத்தமான கதைக்களத்தின் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள அருண்குமார், இந்தப் படத்திலும் ஒரு படி மேலே சென்றிருக்கிறார். நாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் மலையாள நடிகையான அவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார். பெண் குழந்தைகள் கடத்தல், மற்றும் பாலியல் அத்துமீறல் என்ற சிக்கலான கதைக்களத்தில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர்.
இந்தப் படத்தின்மூலம் தன்னால், சாக்லேட் பாய், ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் நடிப்பிலும் அடுத்தக்கட்டத்தை காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார் சித்தார்த். அவரது கேரியரில் பெஸ்ட் படமாக இந்தப் படம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பழனியில் தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், அதன் பின்புலத்தை அழகாக ரசிகர்களுக்கு கடத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படம் சித்தார்த்திற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தை பார்த்துள்ள உலகநாயகன் கமல்ஹாசன் மிகப்பெரிய பாராட்டுக்கைள தெரிவித்துள்ளார். சித்தார்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்தப் படம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்புகளை தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சித்தா படத்திற்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











