Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!

சென்னை: நடிகர் விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகவுள்ளதாகவும் இதையடுத்தே முதல் பாகம் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் வெளியானது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரகாஷ்குமார் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ளார். படத்தில் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actor Siddique joined Vikram s Veera dheera sooran movie

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெங்சாரமுடு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் வீர தீர சூரன். விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டில் வெளியான சூழலில் அடுத்ததாக அவரது தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதேபோல கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு போராடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு ஜானர்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

வீர தீர சூரன் படம்: இந்நிலையில் விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை சித்தா படத்தின்மூலம் கவனம் பெற்றுள்ள அருண்குமார் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் தற்போது படத்தின் டைட்டிலும் டீசருடன் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வீர தீர சூரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் இணைந்த சித்திக்: படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள பட நடிகர் சுராஜ் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள சூழலில் படத்தில் இவரது கேரக்டர் மிகவும் அழுத்தமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் இவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Siddique joined Vikram s Veera dheera sooran movie

10 மில்லியன் வியூசை தாண்டிய டைட்டில் டீசர் : இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டைட்டில் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளதாக படக்குழு சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவரத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், படத்தின் பிஜிஎம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

Actor Siddique joined Vikram s Veera dheera sooran movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X