சித்தார்த் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா?
நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
சித்தார்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர். இவர் இப்போது தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று முன் தினம் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக வாட்சப்பில் மெஸ்ஸேஜ் வந்தது என பதிவிட்டிருந்தார்.
வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் ட்விட்டரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்க சோதனையை நிறைவு செய்யுங்கள் என அந்த மெஸ்ஸேஜில் உள்ளது.
இந்த குறுந்தகவலை பதிவிட்டு யாரோ ஹேக்கர் என் மொபைல் நம்பரை பயன்படுத்துகிறார். மேலும் என்னுடைய போனில் உள்ள எண்களுடன் ட்விட்டர் மூலம் சாட்டிங் செய்யப்படுகிறது. என்ன நடக்கிறது? யாரேனும் பதிலளிப்பீர்களா என ட்வீட் செய்திருந்தார்.
மொபைல் போனில் வைரஸ் இருந்தாலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளது என சிலர் பதிலளித்தனர். அதன்பிறகு நேற்று சித்தார்த் எந்த ட்வீட்டும் போடவில்லை. இன்று நடிகர் நீல் சைமனின் மறைவுக்கு இரங்கல் என ட்வீட் செய்துள்ளார்.
அதனால், ட்விட்டர் அக்கவுண்ட் பிரச்சனை சரியாகி விட்டதா எனத் தெரியவில்லை. இதேபோல் ஜெயம் ரவியின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











