சினிமா ரசிகர்கள் கொண்டாடிய மஞ்சும்மல் பாய்ஸ்..நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு!

சென்னை: மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ளது. பலரின் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் தற்போது 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், படக்குழுவினரை நடிகர் சிம்பு அழைத்து பாராட்டி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று திரையரங்குகளில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.

Actor Silambarasan met the Manjummel Boys team

ரூ 200 கோடி: மலையாளத்தில் சக்கைபோடு போட்ட இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கைப்போடு போட்டது. பொதுவாக எந்த மொழி படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் நல்ல வரவேற்பை கொடுக்கும் நம்ப தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கும் அமோக வரவேற்பை கொடுத்தனர். இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 52 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுமட்டுமின்றி இப்படம் உலகளவில் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Actor Silambarasan met the Manjummel Boys team

வேறொரு எண்ட்: படத்தில் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி இருந்தார்.அதே போல, கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து, படம் எனக்கு பிடித்து இருந்தது, காதல் என்பது நண்பர்களுக்குள்ளும் இருக்கும். குணா படத்தில் ஒரிஜினல் க்ளைமேக்ஸ் படத்தில் காண்பித்தது அல்ல. வேறொரு எண்ட் என்று பாராட்டி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Actor Silambarasan met the Manjummel Boys team

பாராட்டி சிம்பு: இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த சந்திப்பில்,நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். இந்த சந்திப்பில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்.

Actor Silambarasan met the Manjummel Boys team

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X