Simbu: தக் லைஃப் டீமிற்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த சிம்பு.. இதை ஒரு ட்ரெண்டாவே மாத்திட்டாங்களே!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் நடிகர் சிம்பு. முன்னதாக கமல்ஹாசனுடன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் நடித்து வருகிறார்.
குறிப்பாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பதற்காகவே அவர் நீண்ட தலைமுடியை வளர்த்த நிலையில் தற்போது அதே கெட்டப்பில் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசன் இரட்டை கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். 30 ஆண்டுகளை கடந்த மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான அதிகப்படியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
சிம்புவின் பிரியாணி பார்ட்டி: படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குடுமி சகிதம் சிம்புவை காண முடிகிறது. மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அவர் இந்த படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக டெல்லி ஷூட்டிங்கின் புகைப்படம் வெளியான சூழலில் அதில் கமல்ஹாசனுடன் நடிகர் சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதனிடையே தற்போது தக் லைஃப் படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு பிரியாணி பார்ட்டி வைத்துள்ளார். படக்குழுவினருக்கு தன் கையாலேயே அவர் பிரியாணி பரிமாறிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவிழ்ந்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்துவிற்கு பிரியாணி: தற்போது பிரியாணி பார்ட்டி வைப்பது கோலிவுட்டில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தங்களின் சூட்டிங் நிறைவையொட்டி படக்குழுவினருக்கு பிரியாணி பார்ட்டி வைத்த சூழலில் தற்போது நடிகர் சிம்புவும் அந்த வழியில் பயணமாகி உள்ளார். இதனிடையே நேற்றைய தினம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்த நாளையொட்டி அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் நடிகர் சிம்பு பிரியாணி அனுப்பி வைத்ததாக அஷ்வத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்டிஆர் 48 படம்: தக் லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள சூழலில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











