Simbu: உட்சகட்ட சந்தோஷம்.. ஜாக்கெட்டைக் கழட்டி வீசிய சிம்பு.. அதிர்ஷ்டகார ரசிகை!
சிங்கப்பூர்: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், தக் லைஃப். இந்தப் படத்தில் நடிப்பதற்காக, தனது கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படியாக குறைத்தார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இவரது, லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூரில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு பாடினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் இந்தக் கச்சேரியில், அவர் பாடிக்கொண்டு இருக்கும்போது, ரசிகர்களைக் கவரும் வகையில் பலவகையான நடவடிக்கைளைச் செய்தார்.
நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக பல திறைமைகளை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தினை மணி ரத்னம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்கின்றார். சிம்பு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

அதேபோல் சிம்பு தான் அடித்து நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. மேலும் இந்தப் படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார். இந்தப் படத்தின் சிம்பு இதற்கு முன்னர் நடித்து மெகா ஹிட் அடித்த படங்களின் ரிசம்பல்ஸ் இருக்கும் என்பதை இயக்குநரே தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

யுவன் கச்சேரி: இப்படியான நிலையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூரில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு பாடப்போகின்றார் என்ற அறிவிப்பு வெளியானதும், சிங்கப்பூரில் உள்ள சிம்பு ரசிகர்கள் செம குஷி ஆனார்கள். ஏற்கனவே சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ எப்போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற காம்போ. இதுமட்டும் இல்லாமல், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிகின்றார்கள் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம்தான். இருவரும் கடைசியாக மாநாடு படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது.

சிம்பு: இந்நிலையில் சிம்பு கலந்து கொண்டு பாடுகின்றார் என்ற அறிவிப்பு வந்த பின்னர் கச்சேரியின் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்தது. இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பே சிம்பு, சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நேற்று முன் தினம், கச்சேரியில் பாடுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார் சிம்பு. இந்தக் தகவல் தெரிந்ததும், சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தின் வாசலில் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சிம்புவிடம் ஆட்டோ கிராஃப் பெற்றுக்கொண்டார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவியது.

ஜாக்கெட்: இந்நிலையில் நேற்று, கச்சேரியில், மன்மதன் படத்தில் இடம் பெற்ற மன்மதனே நீ கலைஞன் தான் பாடலைப் பாடும்போது, சிம்பு தான் அணிந்திருந்த ஜாக்கெட்டினைக் கழட்டி ரசிகர்களை நோக்கி கழட்டி வீசினார். அதனை கேட்ச் பிடித்த ரசிகை, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, உடனே அதனை போட்டுக் கொள்ளவும் செய்தார். அந்த ஜாக்கெட்டில் எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டுள்ளது. இப்போது, இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலர் அந்த ரசிகையை அதிர்ஷ்டக்கார ரசிகை என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











