இப்பங்கற இடத்தை விடாம புடிச்சிக்கங்க.. சிம்பு கொடுத்த அட்வைஸ்!

சென்னை : நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக மாறியுள்ளார்.

அடுத்ததாக அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படம் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து பத்து தல சூட்டிங்கில் அவர் தற்போது இணையவுள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தன்னுடைய சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். 6 மாத குழந்தையாக நடிப்பில் துவங்கிய இவரது பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த பயணத்தில் அவர் கடந்துவந்த பாதையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சை நாயகன் என்ற பெயரையே அவர் பெற்றிருந்தார்.

நடவடிக்கைகளில் முதிர்ச்சி

நடவடிக்கைகளில் முதிர்ச்சி

இந்நிலையில் தற்போது அவரது நடவடிக்கைகளில் முதிர்ச்சி காணப்படுகிறது. சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். மற்றவர்களிடம் அவர் பழகுவதும் மாறியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இவரது மாநாடு படம் ரிலீசானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

மோஸ்ட் வான்டட் ஹீரோ

மோஸ்ட் வான்டட் ஹீரோ

இந்தப் படத்தை தொடர்ந்து கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக மாறியுள்ளார் சிம்பு. அவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற படம் அடுத்ததாக ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு சித்தி இத்னானி ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

பத்து தல சூட்டிங்

பத்து தல சூட்டிங்

இந்தப் படத்திற்கு இடையில் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்திருந்த மஹா படமும் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல என்ற படத்தின் சூட்டிங்கில் சிம்பு இணையவுள்ளார். முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் சிம்புவின் அப்பா டிஆர் உடல்நலக் குறைவு காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது.

சிம்புவின் வீடியோ

சிம்புவின் வீடியோ

இந்நிலையில் தற்போது சிம்புவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து விஷயங்களையும் நம்முடைய மனதில் ஏற்றிக் கொள்ளாமல் இந்த ஒரு நொடிதான் நமக்கு அனைத்துமாக இருக்கப் போகிறது என்பதை மனதில் வைத்து செயல்பட அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்போது என்பதே நிஜம்

நேற்றைய பொழுதும், நாளைய பொழுதும் இன்றைய பொழுதும் இப்போது என்ற ஒரு நேரத்தை மையமாக கொண்டே செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இப்போது மற்றும் இங்கே என்பதை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

STR |POSITIVITY நிறைய தெரியுது ! Simbu Super Emotional Speech | Paper Rocket Trailer| *Launch
மனதை வெற்றிடமாக வையுங்கள்

மனதை வெற்றிடமாக வையுங்கள்

எதை மாற்ற நினைத்தாலும் எதை செய்ய நினைத்தாலும் அதை இப்போதே செய்து முடிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எந்த விஷயமாக இருந்தாலும் அதை சரண்டர் செய்துவிட்டு மனதை வெற்றிடமாக வைத்துக் கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிம்புவின் இந்த முதிர்ச்சியான பேச்சு அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X