Simbu: கட்டம் கட்டி கலக்குறோம்.. வைப் மோடில் கட்டம் போட்டு காட்டிய சிம்பு.. சிம்பு ரிட்டர்ன்ஸ்!

சென்னை: நடிகர் சிம்புவின் தக் லைஃப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டது. வரலாற்று பின்னணியில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவிருந்தது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ளதாக இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது RKFI நிறுவனம் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

simbu str 49 movie ashwath marimuthu 49

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறார். சாக்லேட் பாயாக, காமெடி களத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்த சிம்பு மீது சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய வயதுக்கு தகுந்த முதிர்ச்சி சிம்புவிடம் காணப்படுகிறது. அடுத்தடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக எஸ்டிஆர் 48 படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

STR48 படம்: ஆனால் மிகவும் பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்திலிருந்து RKFI நிறுவனம் விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவே இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக குறிப்பாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சிம்பு தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை தற்போது மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சிம்புவின் அடுத்தப்படம்: இதுகுறித்த சிம்புவின் அறிவிப்பில் கட்டம் கட்டி கலக்குறோம் என்று அறிவித்துள்ளார். இதற்கேற்ப அவர் வெளியிட்டுள்ள தனது போஸ்டரிலும் கைகளால் கட்டம் கட்டி காண்பித்துள்ளார். இந்த போட்டோவில் தன்னுடைய முகத்தை வெளிப்படுத்தாமல் தனது ஸ்டைல் லுக்கை வெளியிட்டுள்ளார்.டாட்டூ உள்ளிட்டவற்றுடன் இந்த புகைப்படத்தில் மகவும் ஸ்டைலிஷ்ஷாக காணப்படுகிறார். ஆனாலும் எஸ்டிஆர் 48 படத்திற்காக வளர்த்த தன்னுடைய தலைமுடியை அப்படியே ஸ்டைலில் சேர்த்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிம்பு -அஸ்வத் மாரிமுத்து கூட்டணி: ஓ மை கடவுளே படத்தை சிறப்பாக இயக்கியிருந்த அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் இணைவார்கள் என்பது குறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக தம் படத்தில் அவர் இதேபோன்று கட்டம் கட்டி கலக்கிய நிலையில், வல்லவன், மன்மதன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களின் கூட்டுக் கலவையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார். படம் மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X