நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள்.. ரகம் ரகமாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: நடிகர் சிம்பு இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகின்றன.

நடிகர் சிம்பு இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், டான்சர், பாடலசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர். தனது தந்தையான இயக்குநர் டி ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

1984 ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, 2002 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் அவரது தாயார் உஷா தயாரிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பல படங்கள்

பல படங்கள்

தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், சிலம்பாட்டம், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பை பெற்றது. வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் சிம்பு.

காதல் தோல்வி

காதல் தோல்வி

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிம்பு, பல சர்ச்சைகளிலும் சிக்கினார். நயன்தாரா, ஹன்சிகா என ஹீரோயின்களுடன் காதலில் இருந்தார் சிம்பு. முதலில் நயன்தாராவை காதலித்த சிம்பு பின்னர் அவரை பிரிந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

ஒப்பந்தமாகும் படங்களில் பஞ்ச்சுவால்டியை ஃபாலோ பண்ணுவதில்லை என்ற குற்றச்சாட்டும் சிம்பு மீது இருந்து வருகிறது. தற்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் ஷுட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிம்பு இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

இதனை முன்னிட்டு சிம்புவின் ரசிகர்கள், டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். டிவிட்டரிலும் ஏராளமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றனர்.
#HappyBirthdaySTR, #HBDSilambarasanTR, #HBDYouthIconSTR, #happybirthdaysimbu, #HBDSTR ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.

சென்னையில் டாப்

#HappyBirthdaySTR என்ற ஹேஷ் டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பிலும், இந்திய அளவில் 14வது இடத்திலும் ட்ரென்ட்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்பு தலைவா.. வாழ்க வளமுடன்.. மாநாடு படத்திற்கு வாழ்த்துகள். தளபதி ரசிகரிடமிருந்து வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X