எடையை குறைத்த சிம்பு.. பிளாக் அண்ட் பிளாக்கில் தாறுமாறு போட்டோஷூட்!
சென்னை : வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு மற்றும் சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படம் என பேக் 2 பேக் சிம்புவின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
செக்கச் சிவந்த வானம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்பொழுது மாநாடு திரைப்படத்திற்காக திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் இவர் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சிம்பு இப்பொழுது பிளாக் அண்ட் பிளாக் காஸ்ட்யூமில் செம ஸ்டைலிஷாக இருக்கும் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

முன்னோக்கி நகர்த்த
சிம்புவின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகாமல் இருந்தாலும் இவரது ரசிகர்கள் இவரின் மீது கொண்டுள்ள அன்பு இவரை மேலும் முன்னோக்கி நகர்த்த செய்து வருகிறது.

மாநாடு
சில திரைப்படங்கள் தோல்வி சில திரைப்படங்கள் வெற்றி என மாறி மாறி கொடுத்து வரும் சிம்பு "செக்க சிவந்த வானம்" என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு அடுத்து நடித்த "வந்தா ராஜாவா தான் வருவேன் " திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்பொழுது வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு " திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தீவிரமாக நடந்து வருகிறது
மாநாடு திரைப்படத்தில் இவர் நடித்து வருவதை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில் இந்த படத்தின் வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

எடையை குறைத்து ஸ்லிம்மாக
இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சிம்பு அதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

சிகப்பு ரோஜாக்கள் பாகம் இரண்டிலும்
இவ்வாறு சிம்புவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து பேக் 2 பேக் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கமல்ஹாசனுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் பாகம் இரண்டிலும் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

வைரலாகி வருகிறது
கொரானாவால் நாடு முழுவதும் ஸ்தம்பித்துப் போயிருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் சிம்பு எடுத்த ப்ரீ கோவிட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டைலிஷாக நின்றவாறு
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சிம்பு போட்டோ ஷூட்டில் பிளாக் அண்ட் பிளாக்கில் செம ஸ்டைலிஷாக நின்றவாறு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்துள்ள அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











