கூலர்ஸ்.. மாஸ்க்.. என கலக்கலாக வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய சிம்பு!
சென்னை: நடிகர் சிம்பு சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிரபலங்கள் வரும் வாகனங்கள் மற்றும் அவர் அணியும் மாஸ்க்குகள் என அனைத்தையும் வைத்து ஒரு பக்கம் ஒவ்வொரு கதையாய் கிளம்பி வருகிறது.

நடிகர் சிம்பு
இருப்பினும் தமிழகம் முழுவதுமே பொது மக்களும் பிரபலங்களும் தங்களின் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

ரசிகர்கள் செல்பி
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடிகர் சிம்பு தனது வாக்கை பதிவு செய்துள்ளார். மாஸ்க், கூலர்ஸ் என கலக்கலாக வந்து சிம்புவை மொய்த்த ரசிர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

ஆனந்த்ராஜ்
சிம்பு வாக்களித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் நடிகர் ஆனந்தராஜ் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஆனந்த்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

கருணாஸ் குடும்பத்துடன்
இதேபோல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விவேக் வாக்களித்தார். நடிகர்கள் சந்தானம், ஜீவா உள்ளிட்டோரும் தங்களின் வாக்கை பதிவு செய்தனர். நடிகர் கருணாஸ் தனது மனைவி கிரேஸ் மற்றும் மகன் கென்னுடன் சேர்ந்து வாக்களித்தார்.


Click it and Unblock the Notifications











