பாரதிராஜா முன்னிலையில்... மெகா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு.. மாநாடு டீம் ஆஜர்

By

Recommended Video

STR's Birthday Special Public Opinion With Fans! Mass Reactions!

சென்னை: நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

நடிகர் சிம்பு அடுத்து மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். இதை வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.

மாநாடு படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றது. படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பில் இருந்தும் சிம்புவின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து, சிம்பு மீண்டும் நடிப்பார் என்று கூறப்பட்டது. நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டதால் அவர் மலைக்கு சென்று திரும்பிய பிறகு படத்தின் வேலைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

37வது பிறந்த நாள்

37வது பிறந்த நாள்

இதையடுத்து படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் காலை முதலே பல்வேறு வாழ்த்து ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டிங்கில் இருந்தன. இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கவுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இன்று இரவு 8 மணிக்கு... என ஒற்றை வரியில் டிவிட்டியிருந்தார்.

அப்துல் காலிக்

அப்துல் காலிக்

அதைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் அது சிம்புவின் மாநாடு படம் குறித்த அப்டேட்டாகத்தான் இருக்கும் என கொண்டாட்டத்திற்குத் தயாராகினர். இந்நிலையில் வெங்கட் பிரபு சரியாக 8 மணிக்கு படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மாநாடு பட போஸ்டர்தான் அது. அதில் சிலம்பரசன், அப்துல் காலிக்காக... என இடம்பெற்றுள்ளது.

வைரலாயின

வைரலாயின

மேலும் தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை - அப்துல் காலிக் என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். இது வெளியிட்ட சில நிமிடங்களிலேயே வைரலாயின. ரசிகர்கள் ரீடிவிட்டும் செய்து வருகின்றனர். இந்த போஸ்டருடன் பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா

இந்நிலையில் இன்றிரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்புவின் பிறந்த நாள் விழாவை மாநாடு படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. இதில், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், சுப்பு பஞ்சு, மகத், மானேஜர் ஜான் உட்பட பலர் கலந்துகொண்டு சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X