சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : நடிகர் சிம்பு இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டர்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பயணிக்கத் துவங்கி, தற்போது வரை தன்னை சிறப்பான நடிகராக வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து பல ஹிட்களை கொடுத்து தனக்கென அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டு வருகிறது.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

எந்த அளவிற்கு சிறப்பான பல தருணங்களை அவர் தனது கேரியரில் கொடுத்துள்ளாரோ அதற்கேற்ப பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கியுள்ளார். சில நடிகைகளுடன் அவர் காதல் வசப்பட்டதாகவும் பின்னர் பிரேக் அப் ஆனதாகவும் பல்வேறு சர்ச்சைகள் அவர்மீது உள்ளது. தொடர்ந்து சில காலங்கள் நடிக்காமலும் இருந்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படம்

சிம்புவின் மாநாடு படம்

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த மாநாடு படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து சிம்புவிற்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. டைம் லூப்பை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களுடன் கைக்கோர்க்கவுள்ளார்.

சிம்பு பிறந்தநாள்

சிம்பு பிறந்தநாள்

இந்நிலையில் இன்றைய தினம் சிம்பு தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் பல்வேறு சிம்பு பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்களும் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

நம்ம சத்தம் பாடல்

நம்ம சத்தம் பாடல்

சிம்பு பிறந்தநாளையொட்டி பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பாடி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் படத்தின் சில சூட்டிங் ஸ்பாட் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

இதனிடையே சிம்புவின் பிறந்தநாளையொட்டி திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சிம்பு பிறந்தநாளிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ் அவரது சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் வாழ்த்து

நடிகர், நடிகைகள் வாழ்த்து

இதனிடையே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலும் ட்விட்டர் பக்கத்தில் சிம்புவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. விஜே விஜய், அஸ்வத் உள்ளிட்டவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். விஜய், சூர்யா உள்ளிட்டவர்களின் ரசிகர்களும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகளின் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X