என் பொண்டாட்டியை சமைக்க விட மாட்டேன்.. மகிழ்ச்சியா வச்சுப்பேன்.. சபாஷ்ய்யா சிம்பு!
சென்னை : நடிகர் சிம்பு சமைக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
Recommended Video
சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் நடிகர்களை கூட விமர்சனம் என்ற சொல் சீனியர் ஜுனியர் என்றும் பாராமல் தாக்கிவிடும் அப்படி பல விமர்சனங்கள் பல சர்ச்சைகளை பெற்ற நடிகர் நம் சிலம்பரசன். சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து வரும் சிம்பு ஆரம்ப காலத்தில் தன் அப்பாவான டி.ராஜேந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிறுவயது கதாபாத்திரங்களை அதிகமாக நடித்த சிம்பு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

அதன் பின் தானாக முன் வந்து பல கதைகளை தேர்வு செய்து நடித்தார் பல இளைஞர்களையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் திரைப்படம் பலராலும் பேசப்பட்டது அதுமட்டுமின்றி பல இளைஞர்களையும் இந்த திரைப்படம் கவர்ந்து. ஆனால் அப்போதே பல சர்ச்சைகளிலும் இவர் சிக்கினார். அன்று முதல் இன்று வரை இந்த சர்ச்சைகள் அவரை விடாமல் துரத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து வெளிவந்த வல்லவன் திரைப்படமும் இவரின் இயக்கத்தில் வெளிவந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அப்பொழுது தான் ஆரம்பித்தது இந்த சிம்பு நயன்தாராவின் சர்ச்சை. ஆனால் அதை மனதில் கொள்ளாமல் பல படங்கள் மீண்டும் நடிக்க தொடங்கினார்.இன்று வரை தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.ஆனால் முன்பை விட அவரின் மேல் சர்ச்சைகளும் விமர்சனங்ளும் அதிகமாகதான் உள்ளது.

ஷூட்டிங் போது டைமுக்கு வர மாட்டார் என்பதே இவரின் மேல் பல தயாரிப்பாளர்கள் வைக்கும் விமர்சனம்.தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த சிம்பு இந்த சர்ச்சைகளுக்கு பின் வருடத்திற்கு ஒரு படம் இல்லையெனில் அதுவும் கிடையாது என்பது போல் ஆகிவிட்டது. தற்போது சமூக வலையதளங்களில் இவரின் வீடியோ ஓன்று வெளிவந்த்துள்ளது.

அதில் அவர் சமைத்து கொண்டிருக்கிறார் அவருடன் விடிவி கணேஷ் அவர்களும் இருக்கிறார். அதில், எனக்கு வரப்போகும் மனைவியை சமைக்க விடமாட்டேன் எனவும், என் மனைவி என்ன வேலைக்காரியா? என்றும் கேட்டுள்ளார் சிம்பு, மேலும் அவர்களுக்கு பிடித்தால் சமைக்கட்டும் இல்லையெனில் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிக்பாஸ் பிரபலம் மஹத்தும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











