வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு இத்தனை கெட்டப்புகளில் நடித்துள்ளாரா?

சென்னை: சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

இதையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்

இப்படத்திற்காக பெருமளவு உடல் எடையை குறைத்த சிம்பு இந்த படத்தில் பல கெட்டப்புகளில் தோன்றுகிறார் என கூறப்படுகிறது

டைம் லூப் பாணியில்

டைம் லூப் பாணியில்

ஈஸ்வரன் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் சிம்பு. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எப்போதும் கலகலப்பான படங்களை இயக்கும் வெங்கட்பிரபு சற்று வித்தியாசமாக மாநாடு டைம் லூப் பாணியில் உருவாக்கியிருந்தார். சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா , எஸ் ஏ சந்திரசேகர் என பலர் நடித்திருந்த இந்த படம் பல காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. பின்பு ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மாநாடு திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது, அதில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

இந்த நிலையில் அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் சிம்பு புதிய படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்க இப்போது இந்த வெற்றிக் கூட்டணியை ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

ரொமான்டிக் மற்றும் ஆக்சன் படங்களை தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் இயக்கி இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தையும் ஆக்சன் கதை களத்தில் உருவாக்கி வருகிறார். இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை பெருமளவு குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ஐந்து கெட்டப்புகளில்

ஐந்து கெட்டப்புகளில்

வெந்து தணிந்தது காடு படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு இந்த படத்தில் மொத்தம் ஐந்து கெட்டப்புகளில் தோன்றுகிறார் எனவும் அந்த ஐந்து கெட்டப்புகழும் வெவ்வேறு கால நிலைகளில் நடக்கின்றவாறு இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X