காதலிச்சு ஏமாத்தி இருக்காங்க.. அது தாங்க முடியாத வலி.. உடைந்து பேசிய சிம்பு!

சென்னை: நயன்தாராவின் ஆவண வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் குடும்பம், காதல் தோல்வி, திருமணம் என அனைத்தும் குறித்து நயன்தாரா பேசியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் நடிகர் சிம்பு காதல் குறித்தும் காதல் தோல்வி குறித்தும் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஐபிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் உரிமை பெற்ற இருந்ததால், இந்த திருமணத்தில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஒருசில போட்டோக்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று கூறப்பட்டும், இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த வீடியோ நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியானது.

simbu nayanthara

நயன், தனுஷ் மோதல்: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வீடியோ வெளியானது. அதாவது இந்த வீடியோவின் டிரைலரில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நொடி காட்சி இடம் பெற்றதற்காக தனுஷ், 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா கூறியிருந்தார். இது தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையே பெரும் மோதலாகவே மாறியது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, நயன்தாராவின் பிறந்த நாள் அன்று, நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வீடியோ வெளியானது.

முதல் ரிலேஷன்ஷிப்: அதில், நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமானது நயன்தாராவின் குடும்பம், காதல் தோல்வி என பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். அதில் நயன்தாரா அவர்கள் சினிமாவிற்கு வந்தது, அப்பா மீது வைத்து இருக்கும் அன்பு, காதல் குறித்து பேசி இருந்தார். மேலும், முதல் காதலில் தோல்வி அடைந்து மனதளவில் மிகுந்த பாதிக்கப்பட்டதாகவும். குறிப்பாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது, அந்த நபர், சினிமாவை விட்டு விலக சொன்னதாகவும் கூறியிருந்தார். தானும் சினிமாவை விட்டு, விலகும் முடிவை எடுத்ததாகவும் கடைசியில் அந்த உறவே முறிந்து விட்டதாகவும் நயன்தாரா கண்ணீருடன் கூறியிருந்தார்.

ஏமாந்து இருக்கேன்: நயன்தாராவின் வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில், சிம்பு காதல் தோல்வி குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.அந்த வீடியோவில் தொகுப்பாளினி காதலித்து ஏமாந்து இருக்கீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சிம்பு, காதலித்து ஏமாறவில்லை, நான் காதலித்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். நான் காதலித்தவர்கள், என்னோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் காதலித்து ஏமாந்தேன்.

ஏமாற்றி இருக்கிறார்கள். நான் காதலித்தவர்கள், என்னோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் காதலித்து ஏமாந்தேன்.

ஏன் என்றால், அந்த நேரத்தில் அந்த காதல், எனக்கு தேவைப்பட்டது. என்னை ஏமாற்றியதற்காக நான் எப்போதும் அவர்கள் மீது குறை சொல்ல மாட்டேன். ஏன் என்றால், அந்த காதல் தோல்வி கொடுத்த வலிதான். இந்த இடத்திற்கு என்னை வரவைத்து இருக்கிறது, எனக்கு மெச்சூரிட்டி வந்து இருக்கிறது, என்னை மோல்டாக்கி இருக்கிறது அதற்கு எல்லாம் காரணம் அந்த ஏமாற்றம் கொடுத்த வலி தான் என்று சிம்பு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X