Simbu: தக் லைஃப் படத்தின் டப்பிங்கை துவங்கிய சிம்பு.. அட வேகமாத்தான் வேலை நடக்குது!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்து நடித்து வருகிறார்.

முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தன. இதில் கமல்ஹாசன், சிம்புவின் கேரக்டர் லுக் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது. இந்நிலையில் சிம்பு இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

Kamal haasan Simbu Thug life movie

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் சூழலில் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் அடுத்தடுத்து செர்பியா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டப்பிங்கை துவங்கிய சிம்பு: முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங்கில் சிம்பு இணையவிருந்த நிலையில் தக் லைஃப் படத்தையொட்டி எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இந்த படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து விரைவில் படக்குழுவினர் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே, படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கியுள்ளதாக நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

Kamal haasan Simbu Thug life movie


சிம்பு இன்ஸ்டாகிராம் பதிவு: இது குறித்து சிம்பு டப்பிங் பேசும் படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் சிம்பு திரும்பியபடி போஸ் கொடுத்திருந்தாலும் அவரது லுக் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு, சிம்பு அடுத்ததாக எஸ்டிஆர்48 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்தடுத்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றவும் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தக் லைஃப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்புவின் படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

விறுவிறு சூட்டிங்: தக் லைஃப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் சூட்டிங்கை அடுத்தடுத்த திட்டமிடலுடன் மணிரத்னம் மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது டப்பிங் பணிகளும் ஒருபுறம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X