தனுஷ் செய்த விஷயம்.. சிம்பு கொடுத்த பதிலடி.. கோலிவுட்டில் மீண்டும் உருவாக காத்திருக்கும் யுத்தம்!
கோலிவுட்டில் நடிகர்கள் சிம்பு தனுஷ் இடையே மீண்டும் சண்டை உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.
சென்னை: கோலிவுட்டில் நடிகர்கள் சிம்பு தனுஷ் இடையே மீண்டும் சண்டை உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.
நடிகர் சிம்புவும், நடிகர் தனுஷும் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தார்கள். இரண்டு நடிகர்களுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனை இருந்தது.
ஆனால் போக போக இரண்டு பேருக்கும் இடையில் இருந்த பிரச்சனை சரியானது. அதேபோல் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து பார், பார்டி என்று செல்லும் நிலை கூட உருவானது.

நட்பு
இந்த நிலையில் இரண்டு பேருக்கும் இடையில் தற்போது மீண்டும் பிரச்சனை உருவாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தற்போது நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்றுதான் தொடங்கியது.

எப்படி சண்டை
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது இந்த படம் தொடர்பான டிவிட்கள் பல நேற்று இணையத்தில் பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ட்ரெண்டை கட்டுப்படுத்தும் வகையில் அதே நாள் தனுஷ் நடிக்கும் டி40 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சிம்பு கோபம்
இது சிம்பு தரப்பை பெரிய அளவில் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி டிரெண்டானது மாநாடு படத்திற்கு பிரச்சனை ஆனது. சரியாக மாநாடு புகழை மறைக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியானது. மாநாடு டிரெண்ட் இதனால் பாதியில் நின்று போனது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஷாக்கானார்கள்.

என்ன சண்டை
இந்த சண்டையை அதிகரிக்கும் விதமாக தற்போது சிம்பு புதிய விஷயம் ஒன்றை பேசியுள்ளார். கல்லூரி விழா ஒன்றில் பேசிய சிம்பு, வாழ்நாள் முழுக்க ஜெயிக்கும் ஒருவன் கண்டிப்பாக கடைசியில் தோல்வி அடைவான். அவன் ஹீரோ கிடையாது. அவன்தான் ஸீரோ. நான் ஹீரோ. நான் வாழ்நாள் முழுக்க தோற்றேன். கடைசியில் நான்தான் ஜெயிப்பேன், என்று சிம்பு கூறியுள்ளார்.

யாரை சொன்னார்
இவர் தனுஷை குறி வைத்துதான் இப்படி கூறினார். தனுஷுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இப்படி கூறினார் என்று இரண்டு தரப்பு ரசிகர்களும் கூறுகிறார்கள். இதனால் சிம்பு தனுஷ் இடையே அறிவிக்கப்படாத சண்டை மீண்டும் உருவாகி இருக்கிறது. இது பெரிதாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எப்படி சிம்பு
இதனால் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் நேற்று டிவிட்டரில் சண்டை வந்துள்ளது. மாறி மாறி இரண்டு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எங்கள் ஹீரோதான் பெரிய ஆள். நாங்கள்தான் ஹீரோ, நீங்கள் ஸீரோ என்று கூறி சண்டை போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











