சரியான நேரத்தில் தர்ஷனுக்கு சிம்பு தந்த சர்ப்பிரைஸ் பரிசு.. அது என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கங்க!
ரோண்டா பைன் எழுதிய 'ஹீரோ' எனும் புத்தகத்தை தர்ஷனுக்கு பரிசாக அளித்துள்ளார் நடிகர் சிம்பு.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் தர்ஷனை சந்தித்த நடிகர் சிம்பு, அவருக்கு ஏற்ற பரிசு ஒன்றை தந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் தர்ஷன். டைட்டில் வின்னராக அவர் தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 98வது நாளில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தர்ஷனின் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்தனர். டிவீட்டுகள் பறந்தன.

பட வாய்ப்பு
இறுதிப் போட்டி அன்று தர்ஷனை மேடைக்கு அழைத்து ஒரு பெரிய வாய்ப்பை கொடுத்தார் கமல். தனது ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் சார்பில் தர்ஷனை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கப் போவதாக அறிவித்தார் அவர். இது தர்ஷன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது.
வாழ்த்திய சிம்பு
இதையடுத்து நேற்று சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் நடிகர் சிம்பு. அப்போது சாண்டியை அலேக்காக தூக்கி ஒரு சுற்று சுற்றி முத்தம் கொடுத்தார் அவர். பின்னர் தர்ஷனுக்கு ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார் சிம்பு.

சிம்புவின் பரிசு
சிம்பு தனக்கு பரிசளித்த புத்தகத்தின் புகைப்படத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சிம்புவை சந்தித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது அறிவார்ந்த வார்த்தைகள் மற்றும் பரிசுக்கு நன்றி என தர்ஷன் குறிப்பிட்டுள்ளார்.

திறமையை கண்டறியலாம்
தர்ஷனுக்கு சிம்பு பரிசளித்த அந்த புத்தகத்தின் பெயர் 'ஹீரோ'. ரோண்டா பைன் எழுதிய அந்த புத்தகம் உலகளவில் மிகவும் பிரபலமானது. ஒருவர் தனக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிய அந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு சொன்ன வார்த்தைகள்
கூடவே அந்தப் புத்தகத்தில், ‘ஹீரோக்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்' என எழுதி தர்ஷனும் மிகப்பெரிய ஹீரோவாக வேண்டும் என சிம்பு தன் கைப்பட எழுதி வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படத்தையும் தர்ஷன் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











