க்யூட் கூலர்ஸ்.. கூல் போஸ்.. பத்து தல பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு அதகளம்!
சென்னை : நடிகர் சிம்புவின் பத்து தல படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
சிம்புவின் அடுத்தடுத்தப் படங்கள் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் இந்தப் படமும் சிறப்பான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், தற்போது படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.

நடிகர் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத்துவங்கி தற்போது வரை சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சிம்பு. தன்னுடைய ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ப, கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப்படங்களாக மாறியுள்ளன.

பத்து தல படம்
இந்நிலையில் தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் சூட்டிங், சென்சார் உள்ளிட்டவை முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் மார்ச் 30ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்திற்கும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல படத்திலும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்துள்ளார். இரண்டு படங்களின் பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் கலந்துக் கொண்ட சிம்புவை பார்த்து திரையுலகமே வியப்பை வெளிப்படுத்தியது. மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்தார் சிம்பு.

கமல் தயாரிப்பில் இணைந்த சிம்பு
மேலும் இனிமேல்தான் ரசிகர்களுக்கு அதிகமான விருந்து காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். பத்து தல படத்தை தொடர்ந்து கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்தப்படத்தில் இணைந்துள்ளார் சிம்பு. இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சியில் சிம்பு போர்வீரராக நடிக்கவுள்ளதாகவும் அதற்கான மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியை அவர் வெளிநாட்டில் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர் வீரராக சிம்பு?
இந்தத் தகவலை நிரூபிக்கும் வகையில் அவர் தற்போது தன்னுடைய தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளார். போர்வீரராக அவர் நடிப்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்து தல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ள வந்திருந்த சிம்பு, தன்னுடைய புதிய கெட்டப்பில் க்யூட்டாக காட்சியளித்தார். கூலர்ஸ், தொப்பி சகிதம் வந்திருந்த அவர் இந்த போஸ் ஓகேவா, இது ஓகேவா என பத்திரிகையாளர்களுக்கு கூலாக போஸ் கொடுத்தார்.

சிம்புவின் அதிரடி மாற்றம்
எப்போதும் அதிகமான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத சிம்புவின் செயல்பாடுகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று தன்னுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறார். அவரின் இந்த மாற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது. புதிய லுக்கில் மிகவும் தெளிவான மனநிலையுடன் சிம்பு காணப்படும் நிலையில், அவரின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











