பத்து தல ஆடியோ ரிலீசில் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னது சிம்புவும் படம் இயக்கப் போறாரா?
சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதனால் அடுத்ததாக வெளியாகவுள்ள பத்து தல படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவுள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெற்றி பெற்று அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படங்களில் சிம்புவின் பண்பட்ட நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

அடுத்தடுத்த வெற்றி
மாநாடு படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் டைம் லூப் அடிப்படையில் வெளியான நிலையில், வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவின் வித்தியாசமான பரிணாமத்தை வெளிப்படுத்தியது. இந்தப் படத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்புவுடன் கூட்டணி அமைத்திருந்தார்.

பிரம்மாண்ட இசை வெளியீடு
ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் அடுத்த பாகமும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தப்பட அறிவிப்பு?
வரும் மார்ச் 18ம் தேதி படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை சிம்பு வெளியிடுவார் என்றும் அது பெரும்பாலும் அவருடைய இயக்கத்தில் உருவாகும் படமாக அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படமியக்கும் சிம்பு?
சிம்பு, ரீமா சென், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வல்லவன் படத்தை இயக்கி, தன்னை சிறப்பான இயக்குநராகவும் வெளிப்படுத்தினார் சிம்பு. அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனில் ஈடுபட உள்ளார் சிம்பு. இந்தப்படத்தில் அவர் ஹீரோ இல்லை என்றும் கேமியோ கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பான நம்ம சத்தம் பாடல்
எதுவாக இருந்தாலும் பத்து தல ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இதுகுறித்த ஒரு தெளிவு ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே பத்து தல படத்தில் தொட்டி ஜெயா, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் சிம்பு பிறந்தநாளையொட்டி படத்தின் நம்ம சத்தம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications