Simbu: கமல் -மணிரத்னம் கூட்டணியில் இணையும் சிம்பு.. சூப்பர் காம்பினேஷன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன். குறுகிய காலத்தில் இந்தப் படத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்துடன் KH234 படத்தில் கமல் இணையவுள்ளார். இந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் -மணிரத்னம் காம்பினேஷனில் இணையும் சிம்பு: நடிகர் கமல்ஹாசன் -இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. லைகா தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, திருப்பதி, தைவான், ஆப்ரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் பைனல் ஷெட்யூல் நடந்துவரும் நிலையில், இந்த மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் படங்களை அறிவித்து வருகிறார். அடுத்ததாக தன்னுடைய நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அவர் இணையவுள்ளார். குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை சரிபார்த்த கமல்ஹாசன் சில மாற்றங்களை தெரிவித்ததாகவும் அதில் தற்போது ஹெச் வினோத் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து கமலின் அடுத்தப்படம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தப் படங்களின் அறிவிப்புகளை ராஜ்கமல் இன்டர்நேஷனல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் -கமல்ஹாசன் காம்பினேஷன் மேஜிக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் தன்னுடைய படங்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அவரது அடுத்தடுத்த படங்கள் கவனத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் அடுத்தாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பில் சிம்பு அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில #STR50 படத்திற்காகத்தான் மணிரத்னம் -கமல் காம்பினேஷனில் சிம்பு இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் மணிரத்னத்தின் ஸ்டைலில் காதல் மற்றும் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











