Actor Simbu: மாதவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.. அப்ப எஸ்டிஆர் 48?

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர்48 படத்தில் கமிட்டானார். வரலாற்று பின்னணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களையும் சிம்புவே நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் திருநங்கை கேரக்டரிலும் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தற்போது கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Actor Simbu going to join with director MR Madhavan in his next

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு பத்து தல படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர்48 படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரட்டை வேடங்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் திருநங்கை கேரக்டரிலும் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளி போய் வருகிறது. இதனிடையே கமல்ஹாசனுடன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார் சிம்பு. இந்த படத்தின் சூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

தக் லைஃப் பட சூட்டிங்: டெல்லியில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் கமல் மற்றும் சிம்புவின் காம்பினேஷன் காட்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் தள்ளி போய் வருகிறது. இந்நிலையில் தற்போது சிம்பு, மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக டைனோசர்ஸ் படத்தை இயக்கிய எம்ஆர் மாதவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாதவனுடன் இணையும் சிம்பு: மாதவன் சொன்ன கதை சிம்புவிற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் உடனடியாக ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த கதையை மாதவன் எழுதி வருவதாகவும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிம்பு கடந்த ஆண்டிலேயே எஸ்டிஆர்48 படத்தில் கமிட்டானார். இந்தப் படத்திற்கா கொடர்ந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளையும் வெளிநாட்டில் மேற்கொண்டார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் செட்டுகள் பிரம்மாண்டமாக போடப்பட்டு வருகிறது.

தாமதமாகும் எஸ்டிஆர்48 படம்: இந்த படத்தின் 90 சதவிகித சூட்டிங் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படமாக்கப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான செட்கள் பிரம்மாண்டமாக போடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாவது சிம்புவை மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களையும் ஏமாற்றம் மற்றும் அதிப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதனிடையே சிம்பு தன்னுடைய அடுத்தப்படத்தில் கவனம் செலுத்த முற்பட்டு வருவது நல்ல முடிவு என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X