Don't Miss!
- News
இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? ரெடியாகாத வேட்பாளர்.. எடப்பாடி திணறுகிறாராமே? இவர் இப்படி சொல்லுறாரே?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் சிம்பு.. சூப்பர் டைரக்டர் இயக்கத்தில் கமிட்டாகும் பத்து தல ஹீரோ!
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. வெற்றிப்படங்களாகவும் மாறியுள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவரது பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இதனிடையே அடுத்ததாக அவர் நடிக்கவிருந்த கொரோனா குமார் படம் கைவிடப்பட்டுள்ளது. சிம்பு நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
விரைவில் மன்மதன் 2… அதிரடியாக முடிவெடுத்த சிம்பு…ஜோதிகா இடத்தில் யார்?

சிம்புவின் அடுத்தடுத்த வெற்றிகள்
நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றியடைந்துள்ளன. இதனிடையே சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக பத்து தல படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் படத்தில் நடித்த சிம்பு
முன்னதாக மாநாடு படத்தில் டைம் லூப்பை அடிப்படையாக கொண்ட கதைக்களத்திலும், அடுத்ததாக கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்ட வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படங்களில் இவரது நடிப்பு அதிக மெருகுடன் காணப்பட்டது. சிம்புவின் நடிப்பில் மெச்சூரிட்டி ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அடுத்த மாதம் ரிலீசாகும் பத்து தல
இதனிடையே தற்போது சிம்பு நடிப்பில் பத்து தல படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹீரோ கதையில் சிம்பு
இந்தப் படத்தை தொடர்ந்து கொரோனா குமார் என்ற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு பதிலாக இயக்குநர்கள் ஏஆர் முருகதாஸ் அல்லது சுதா கொங்கராவுடன் இணைந்து சிம்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஏஆர் முருகதாஸ் சிம்புவிற்கு சூப்பர் ஹீரோ கதை ஒன்றை கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்தப்படம்
ஆனாலும் இன்னும் இந்தக் கதை பைனல் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சிம்புவை இருமுறை ஏஆர் முருகதாஸ் நேரில் சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தப் படத்திற்காக சிம்புவை ஏஆர் முருகதாஸ் அல்லது சுதா கொங்கரா யார் இயக்குவார்கள் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாவிற்கு திட்டம்
இதனிடையே தற்போது நடித்துவரும் பத்து தல படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளிநாட்டில் சில தினங்கள் தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள சிம்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்தே தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை சிம்பு மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.