Actor Simbu: வாழ்க்கை ஒரு வட்டம்டா.. தக் லைஃப் பட விஷயத்தில் உண்மையான வாக்கியம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வரும் சூழலில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் செர்பியாவில் படத்தின் சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அடுத்தடுத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் பிசியான கமல்ஹாசன், இந்த ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. அவருடன் ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருந்த சூழலில் அவரது கால்ஷீட் இதனால் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சினைகளால் நடிகர் ஜெயம் ரவி தற்போது விலகியுள்ளார். முன்னதாக இதே பிரச்சினையில் துல்கர் சல்மானும் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை நிறைவு செய்துவிட்டு தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக மீண்டும் செர்பியாவில் நடக்கவுள்ள படத்தின் சூட்டிங்கில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து திட்டமிடப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Simbu going to Replace Dulquer salman in Thug Life movie it seems

நடிகர் கமல்ஹாசன்: விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அவரது 234வது படமான தக் லைஃப் படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்த படத்தின் ஷூட்டிங் முன்னதாக சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் செர்பியாவில் ஷூட்டிங்கை நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். அமெரிக்காவில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசன் நேரடியாக செர்பியா ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று முன்னதாக கூறப்பட்டது.

சூட்டிங்கில் பங்கேற்காத கமல்: ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் வகையில் செர்பியாவில் நடந்த ஷூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் தக் லைஃப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதி தமிழத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை கமல்ஹாசன் இந்த படத்தின் சூட்டிங்கில் இணைய மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக செர்பியாவின் சூட்டிங்கில் நடிகர் ஜெயம் ரவியும் பங்கேற்கவிருந்த சூழலில் அவரது கால்ஷீட் வீணடிக்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி: இதனால் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் ஜெயம் ரவி இணைய முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். முன்னதாக இதே பிரச்சனைகளால் நடிகர் துல்கர் சல்மானும் இந்த படத்தில் இருந்து விலகிய சூழலில் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டரில் முதன் முதலில் சிம்பு தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எஸ்டிஆர்48 படத்திற்காக அவர் தனது கெட்டப்பை மாற்றியிருந்த நிலையில் அவர் தக் லைஃப் படத்தில் இணையவில்லை. அவருக்கு பதிலாக தான் துல்கர் சல்மான் இந்த படத்தில் இணைந்தார்.

துல்கருக்கு பதிலாக சிம்பு: துல்கர் சல்மான் தற்போது தக் லைஃப் படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்புவின் அடுத்ததாக நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஜெயம் ரவி படத்திலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க அரவிந்த்சாமி, நிவின் பாலி உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனைத்து விஷயங்களையும் மீண்டும் சரிபடுத்தி அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் செர்பியாவில் துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X