பிரேம்ஜி எல்லாம் கூட இருந்தும் குடிக்காம இருக்கறது பெரிய விஷயம்... சிம்பு ஓபன் டாக்

சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் மாநாடு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ட்விட்டரில் சிம்பு, வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட மாநாடு குழுவினர் அனைவரும் இணைந்து கலந்துரையாடினர்.

அப்போது தன்னுடைய குடிப்பழக்கம் குறித்து நடிகர் சிம்பு வெளிப்படையாக பேசினார்.

சிம்புவின் நடிப்பில் மாநாடு

சிம்புவின் நடிப்பில் மாநாடு

நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்.

ட்விட்டரில் கலந்துரையாடல்

ட்விட்டரில் கலந்துரையாடல்

படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதனிடையே படத்தின் லிரிக் வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் இணைந்து ட்விட்டரில் கலந்துரையாடினர்.

பல்வேறு விஷயங்கள் பகிர்வு

பல்வேறு விஷயங்கள் பகிர்வு

படத்தின் நாயகன் சிம்பு, எஸ்ஜே சூர்யா, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

Recommended Video

Silambharasan Live : இந்த பழக்கத்தை விட்டு 1 வருஷம் ஆகுது | Maanadu
ஓராண்டாக 'நோ' குடிப்பழக்கம்

ஓராண்டாக 'நோ' குடிப்பழக்கம்

அப்போது நடிகர் சிம்பு தான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரேம்ஜி போன்றவர்கள் உடனிருந்தும் தான் குடிக்காமல் இருந்தது மிகப்பெரிய விஷயம் என்றும் அவர் நகைச்சுவையாக பேசினார். தற்போது அதிகமான படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் தன்னடைய உடலை குறைத்து பழைய சிம்புவாக அவர் காட்சியளித்திருந்தார். தற்போது பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X