Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
யாரா இருக்கும்.. சிம்புவுடன் நெருக்கமாக இளம் பெண்.. இணையத்தை கலக்கும் போட்டோ.. அப்படி இருக்குமோ!
சென்னை: நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
பெரும் தடைகளை தாண்டி இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கியுள்ளார் சிம்பு.
ஐயப்பன் கோவிலுக்கு..
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிம்பு. அண்மையில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட சிம்பு, 40 நாட்கள் விரதம் மேற்கொண்டு ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் மலைக்கு சென்றுவிட்டு திரும்பியதை தொடர்ந்து மாநாடு படத்தின் பணிகள் சூடு பிடித்துள்ளது.
வைத்த கண் வாங்காமல்
அண்மையில் சிம்பு ஷேவ் செய்து எடைய குறைத்த போட்டோக்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சிம்பு இளம் பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இருவரும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.
அவர்தான் இவரா?
அப்போது எடுக்கப்பட்ட அந்த செல்பி போட்டோவை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் யார் இந்த பெண் என கேட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் பெண் பார்த்து விட்டார்களா? அவர்தான் இவரா? இவரைதான் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என்றும் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
என்னய்யா நடக்குது?
மேலும் சிலர் என்னய்யா நடக்குது என்றும் நீ அடங்கவே மாட்டியா தலைவா என்றும் கேட்டுள்ளனர். உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி நடக்கிறது.. வயிற்றெரிச்சலாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் சிம்புவுக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து வரும் நிலையில் இந்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.