தக் லைஃப்: ஜுரத்துலயும் ஆக்ஷன் காட்சியில் நடித்துக் கொடுத்த சிம்பு.. என்ன இப்படி சேஞ்ச் காமிக்கிறாரு
சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடத்தப்பட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதையடுத்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு றியுள்ளது. படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவரது வளர்ப்பு மகனாக சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட தலைமுடியுடன் ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு: எஸ்டிஆர் 48 படத்திற்காக வளர்த்த தலைமுடியுடனேயே சிம்பு இந்தப் படத்திலும் நடித்துள்ள நிலையில், பொருத்தமாகவே உள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரித்துவரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898 ஏடி மற்றும் தக் லைஃப் என மூன்று படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள்: இந்த ஆண்டு டிசம்பரில் தக் லைஃப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கை மணிரத்னம் விரைவுப்படுத்தி வருகிறார். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் சண்டை காட்சிகள் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளன. தேசிய விருது பெற்ற அன்பறிவ் மாஸ்டர்கள் இந்த சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.
ஜுரத்துடன் நடித்த சிம்பு: தொடர்ந்து இரு தினங்கள் இந்த அதிரடி சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இதில் கடுமையான ஜுரத்துடன் சிம்பு பங்கேற்று நடித்துக் கொடுத்துள்ளார். திட்டமிட்டபடி இந்த சூட்டிங்கை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் சிம்பு நடித்துக் கொடுத்துள்ளார். இந்த சண்டை காட்சி படத்தின் முக்கியமான ஒன்றாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விக்ரம் படத்தின் இடைவேளை காட்சியில் பயன்படுத்தப்பட்ட மோகோபாட் ரோபோட்டிக் கேமரா மூலம் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூட்டிங்கில் முறையாக கலந்துக் கொள்ளமாட்டார் என்று தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்துவந்த சிம்பு, தற்போது ரொம்பவே மாறிவிட்டதாகவும் படக்குழுவினர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











