Simbu: யுவன் கச்சேரியில் டான்சராகவும் மாறிய சிம்பு.. ப்பா என்ன டான்ஸ்டா!

சென்னை: நடிகர் சிம்பு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமையுடன் வலம் வந்துக் கொண்டிருப்பவர்.

சமீபத்தில் இவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள STR48 படத்தின் சூட்டிங்கில் விரைவில் சிம்பு இணையவுள்ளார்.

Actor Simbu joined with Music director Yuvan shankar raja for music concert in Malaysia

யுவன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்பு: நடிகர் சிம்பு, சிறந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமையுடன் கோலிவுட்டில் வலம்வந்து கொண்டிருப்பவர். இத்தகைய சிறப்புகள் இருந்தாலும் அதிகமான சர்ச்சைகளுக்கும் ஆளானவர். தற்போது அவரது கதைத்தேர்வுகளில் முதிர்ச்சி காணப்படுகிறது. தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களின் வெற்றி அவரது ரசகிர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இவர்களது கூட்டணி மிகப்பெரிய மேஜிக்கை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், பத்து தல படத்தின் ரிலீசின்போதே, வெளிநாட்டிற்கு சென்ற சிம்பு, படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பழகியதாக கூறப்பட்டது. படத்திற்காக நீண்ட தலைமுடியையும் அவர் வளர்த்துள்ளார்.

வரலாற்றுப் பின்னணியுடன் STR48 படம் உருவாகவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டில்தான் மார்ஷியல் ஆர்ட்சை சிம்பு பழகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. சூட்டிங்கிற்கு முன்னதாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிம்பு மலேசியாவில் உள்ளார். சிம்புவின் High On U 1 இசைநிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அதில்தான் தற்போது சிம்பு பங்கேற்றுள்ளார்.

முன்னதாக இசை நிகழ்ச்சிக்கு வந்த சிம்புவிற்கு ரசிகர்கள் மிகச்சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர். அவரும் தொடர்ந்து சிறப்பான பல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். மேலும் அந்த பாடல்களுடன் அவரது நடனமும் சேர்ந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கியது. ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். STR48 படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார் சிம்பு. அந்த முடியை விதவிதமான ஸ்டைலாக்கி அவர் கொண்டை போட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தான் பாடிய பாடல்கள் மட்டுமில்லாமல் தன்னுடைய தந்தை டிஆர் பாடிய யம்மாடி.. ஆத்தாடி பாடலையும் அவர் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக க்யூட் நடனத்துடன் தந்திருந்தார். இந்த பாடலின்போது ரசிகர்களிடையே ஆரவாரம் அதிகமாக காணப்பட்டது. மேடையில் யுவன் சங்கர் ராஜா -சிம்புவும் இணைந்து பல பாடல்களை பாடினர். தத்தை தத்தை தத்தை என்ற மன்மதன் படப்பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X