Don't Miss!
- News
பேரறிவாளன் விடுதலை:கொலையாளிகள், போராட்டம் என வசனம் பேசி கட்சியை முழுசாக புதைக்கும் தமிழக காங்.தலைகள்
- Finance
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓ மை கடவுளே பட இயக்குனருடன் இணையும் சிம்பு!
சென்னை: சர்ச்சை என்றாலே சிம்பு என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெற்றி என்றால் சிம்பு என்ற நிலை உருவாகி வருகிறது
அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாஸான வெற்றி பெற்று வசூலை அள்ளிய கையோடு இன்றுவரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது
இந்த நிலையில் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது
நீங்கள்
இல்லாமல்
நான்
இல்லை..
ட்விட்டரில்
நெகிழ்ந்த
சிம்பு…
என்ன
விஷயம்
?

மிகப் பெரிய பிரேக்காக
சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு இப்போது முழு மூச்சுடன் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் சிம்புவுக்கு மிகப் பெரிய பிரேக்காக அமைந்தது

டைம் லூப் பாணியில்
இந்த நிலையிலும் இதுவரை ஒப்பந்தமாகி இருந்த அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருந்த மாநாடு திரைப்படம் நடக்குமா நடக்காதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி உண்டாகி இருக்க வழியாக படக்குழுவும் சிம்புவும் சமாதானம் பேசி நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக பிரம்மாண்டமாக உருவானது மாநாடு. மேலும் படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி பட்டையை கிளப்பியது. டைம் லூப் பாணியில் உருவான மாநாடு தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது இன்று வரை திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது

மூன்றாவது முறையாக சிம்பு
வின்னைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறையாக சிம்பு கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த படத்திற்கு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல , கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடிக்க உள்ளார்

ஓ மை கடவுளே பட இயக்குனருடன்
இவ்வாறு சிம்புவுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்க புதிதாக இளம் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்துவுக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்பொழுது ஓ மை கடவுளே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு தயாராகி வருகிறது இந்த நிலையில் அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.