தீயாய் பரத நாட்டியம் கற்கும் நடிகர் சிம்பு.. யார்க்கிட்டன்னு பாருங்க.. இணையத்தை திணறடிக்கும் போட்டோ!
சென்னை: நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக நடிகை ஒருவரிடம் பரதநாட்டியம் கற்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மல்ட்டி டேலன்ட்டட் நடிகராக வலம் வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிம்பு.
நடிப்பு மட்டுமின்றி, எழுத்து, இயக்கம், வசனம், நடனம், பாடல், இசை என அப்பாவுக்கு தப்பாத மகனாக உள்ளார் சிம்பு.

சோஷியல் மீடியாவில் சிம்பு
தற்போது நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு கடந்த 22ஆம் தேதி காலை அசத்தல் வீடியோவுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இணைந்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது.

கழுத்தில் பாம்புடன்
ஆனால் அவர் வெளியிட்ட வீடியோவில் அவரது முகம் முழுவதும் தெரியாமல் போனதால் ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர். இந்நிலையில் சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இதில் கழுத்தில் பாம்புடன் செம ஸ்மார்ட்டாக இருந்தார் சிம்பு.

கிராமத்துக் கதை
ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கிராமத்து கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

சிம்புவின் போட்டோஸ்
நடிகர் சிம்பு 101 கிலோவில் இருந்து, 71 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார். சிம்புவின் ஸ்லிம் ஃபிட்டாக இருக்கும் போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் மேலும் ஒரு போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

பரதம் கற்கும் சிம்பு
அதாவது நடிகர் சிம்பு, நடிகை சரண்யா மோகனிடம் பரதநாட்டியம் கற்று வருகிறார். அந்த போட்டோதான் தற்போது இணையத்தை திணறடித்து வருகிறது. நடிகை சரண்யா மோகன், வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் சரண்யா மோகன், தற்போது சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்று கொடுத்துள்ளார். ஈஸ்வரன் படத்திற்காக நடிகர் சிம்பு பிரத்யோகமாக பரதநாட்டியம் கற்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











