பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு இருமுடிகட்டி ஐய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்ட சிம்பு!

Recommended Video

Nayanthara Spotted in KanyaKumari | Nayanthara Vignesh Shivan | Mookuthi amman

சென்னை: நடிகர் சிம்பு இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு காதல் முறிவு மற்றும் படங்களின் தொடர் தோல்வியால் மன உளைச்சலில் இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் அவர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் சிம்பு கால்ஷிட் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த படத்தின் பணிகள் கைவிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து இப்பிரச்சனையில் தலையிட்ட சிம்புவின் தாயார் சொன்னப்படி சிம்பு நடித்துக்கொடுப்பார் என உறுதியளித்தார்.

மாலை போட்ட சிம்பு

மாலை போட்ட சிம்பு

இதைத்தொடர்ந்து படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் சிம்பு நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே சிம்பு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டார்.

நேற்று மாலை புறப்பட்டார்

நேற்று மாலை புறப்பட்டார்

கடந்த மாதம் 6ஆம் தேதி மாலை அணிந்து, 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார். அதன்படி நேற்று மாலை சபரிமலைக்கு புறப்பட்டார்.

பத்து நாட்களாகும்

பத்து நாட்களாகும்

நடிகர் சிம்பு ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்து திரும்புவதற்கு பத்து நாட்களாகும் என கூறப்படுகிறது.
சிம்பு சபரி மலை ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு வந்த பிறகு மாநாடு படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சாமியே சரணம் ஐயப்பா

சிம்பு தலையில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு புறப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் சாமியே சரணம் ஐயப்பா என தெரிவித்து வருகின்றனர்.

27 ஆண்டுகளுக்கு பிறகு

நடிகர் சிம்பு 1992ஆம் ஆண்டு சபரி மலைக்கு சென்றார். அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சபரிமலை புறப்பட்டுள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X