இப்ப வேற மாதிரி வந்திருக்கேன்.. இனி விடவே மாட்டேன்..சிம்பு அதிரடி பேச்சு!
சென்னை : இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள 'பத்து தல' இசைவெளியீட்டு விழாவில் சிம்பு அதிரடியாக பேசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இத்திரைப்படம் இந்த மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர் சிம்பு பேச்சு
பதில் பேசிய சிம்பு,இங்கே வரும் போது நான் நினைச்சது ஒரே விஷயம் தான், அழக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். நான் எமோஷனல் டைப் சாதாரணமாக படத்தில் ஒரு எமோஷனல் சீன் வந்தாலே நான் அழுதுவிடுவேன். ஆனால், நான் ஏன் இன்னைக்கு அழக்கூடாதுனு நினைச்சேன் என்றால் அது உங்களுக்காக தான். இவ்வளவு நாள் கஷ்டத்தை எல்லாம் பாத்தாச்சு, கஷ்டத்தை எல்லாம் நீங்க தங்கியாச்சு, இனிமே நீங்க சாந்தோஷமா இருக்கணும் சிரிக்கணும். சோக சீன் எல்லாம் முடிஞ்சிடுச்சி இனிமே சந்தோஷமான சீன் தான்.

அனைவருக்கும் நன்றி
இந்த நேரு ஸ்டேடியத்திற்கு பல முறை,பல நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்காக கூடிய கூட்டத்தை தான் பார்த்து இருக்கிறேன். ஆனால், முதல்முறையா எனக்காக என்னை நேசிக்கும் என் ரத்தத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு, எனக்காக பல ஊர்களில் இருந்து வந்து இருக்கிறீர்கள் அதற்காக ரொம்ப நன்றி.

கத்தி பேசக்காரணம் இதுதான்
மாநாடு, வெந்துதணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு பலரும் என்னிடம் கேட்டார்கள், உங்க பேச்சில் முன் இருந்த மாதிரி பயர் இல்லை, ரொம்ப பணிவா இருக்கு என்றார்கள். அது உண்மைதான் நான் அப்போது கஷ்டத்தில் இருந்தேன் என்னை தட்டிக்கொடுக்கயாருமே இல்லை, சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க இந்த மாதிரி சூழ்நிலையில் நான் இருந்தபோது, எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் கத்திப்பேசினேன். அந்த நேரத்தில் என் ரசிகர்களைத் தவிர யாருமேகூட இல்லை.

இப்போ வேறமாதிரி வந்து இருக்கிறேன்
இப்போது மாநாடு, வெந்துதணிந்தது காடு, பத்து தல பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா என அடுத்தடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் போது எப்படி கத்தி பேச முடிவு, பணிவு தான் வரும், அந்த பணிவு தான் இது. பத்துதல படம் முடிந்ததும் மீண்டும் சிம்பு குண்டாகி விட்டார் என்று சொல்லுவாங்க, அதனால் தான் மீண்டும் கடுமையாக உழைத்து எடையை குறைத்து இப்போ வேறமாதிரி வந்து இருக்கிறேன்.

சண்டை போட்டதுபோதும்
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் எனக்காக யாரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம், நான் கஷ்ட பட்ட போது எனக்காக நீங்கள் சண்டை போட்டது போதும் இனிமே நான் என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்க என்று விழா மேடையில் சிம்பு சும்மா அதிரடியாக பேசினார். இந்த விழாவில், பிரியா பவானி சங்கர், ஏஆர் ரஹ்மான், கௌதம் கார்த்தி மற்றும் பத்து தல படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











