Actor Simbu: குட்டி ரசிகர்களை சந்தித்த நடிகர் சிம்பு.. அட கெட்டப் சூப்பராக இருக்கே!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் 30 ஆண்டுகளை கடந்து தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
படத்தில் கமல்ஹாசனுக்கு சிம்பு வளர்ப்பு மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், டெல்லி, ஜெய்சல்மார் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது மீண்டும் சென்னையில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் சென்னையில் சூட்டிங் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்த சூழலில் தற்போது மீண்டும் சென்னையில் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து பாங்காக் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்திருந்த சூழலில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இருவரும் படத்திலிருந்து விலகினர்.
தக் லைஃப் படம்: இதையடுத்து தக் லைஃப் படத்தில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் முன்னதாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி இணைந்திருந்த போது இருந்த தக் லைஃப் படத்தின் கதைக்களத்தை தற்போது மணிரத்னம் முற்றிலும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்பு, கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில் சத்யா பட கெட்டப்பில் கமல் காணப்பட்டார். இந்நிலையில் இந்த கெட்டப்பிலும் மற்றொரு கெட்டப்பிலும் என இருவேறு கெட்டப்புகளில் படத்தில் கமல் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

குட்டி ரசிகர்களை சந்தித்த சிம்பு: தற்போது சென்னையில் துவங்கியுள்ள ஷூட்டிங் மூன்று வாரங்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சிம்பு, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் டெல்லி சூட்டிங்கில் இணைந்து நடித்து வந்தனர். இவர்கள் இருவருக்கான காம்பினேஷன் காட்சிகள் டெல்லியில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள சூழலில், டெல்லி சூட்டிங்கின்போது தன்னுடைய குட்டி ரசிகர்களை சிம்பு சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிம்புவிற்கு டெல்லியில் இத்தனை ரசிகர்களா அதுவும் குட்டி ரசிகர்களா என்று வியக்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் இந்த வீடியோவில் காணப்பட்டனர்.

சிம்புவுடன் செல்ஃபி: அனைவரும் சிம்புவுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோவில் நீண்ட தலைமுடியுடன் சிம்பு காணப்பட்டார். அதை குடுமி போட்டபடியும் காணப்பட்டார். இந்த கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வரும் சூட்டிங்கில் சிம்பு மற்றும் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சென்னை சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு பட குழுவினர் பாங்காக் புறப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











