Simbu: கமல் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த சிம்பு.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திலும், கல்கி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்கி படத்தில் அவர் பிரபாசின் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன். குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

Actor Simbu not going to join Kamal -Maniratnam combination KH234

இந்தப் படத்தை அடுதது தன்னுடைய KH234 படத்திற்காக மணிரத்னத்துடன் இணையவுள்ளார் கமல். இந்தப் படத்தின் சூட்டிங், அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் -மணிரத்னம் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த சிம்பு: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த ஆண்டில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தின் பல அம்சங்களை பார்த்து பார்த்து கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவரது சேனாபதி கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த கேரக்டருக்கான மேக்கப்பிற்காக பல மணிநேரங்களை அவர் செலவழித்ததாகவும் தகவல்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக பிரபாஸ் நடித்துவரும் கல்கி 2898 AD படத்தில் வில்லனாக இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்திற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் டைட்டில் வெளியீடு உள்ளிட்டவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் கலந்துக் கொண்டார்.

இந்தப் படங்களை விரைவில் நிறைவு செய்யவுள்ள கமல்ஹாசன், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய KH233 படத்திற்காக இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் -கமல்ஹாசன் காம்பினேஷனில் KH234 படமும் துவங்கவுள்ளது. இதற்கான ப்ரீ பிரிபரேஷன் பணிகளில் மணிரத்னம் தற்போது ஈடுபட்டுள்ளார்.

Actor Simbu not going to join Kamal -Maniratnam combination KH234

இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தற்போது கமல் தயாரிப்பில் உருவாகவுள்ள தன்னுடைய STR48 படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் காணப்படும் சிம்பு, முன்னதாக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கவும் சென்றிருந்தார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

STR48 படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருடைய கேரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கமல் -மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க மாட்டார் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. சிம்பு படத்தில் கமல் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள நிலையில், மணிரத்னம் -கமல் இணையும் படத்தில் சிம்பு நடிப்பது சிறப்பாக இருக்காது என்பதால் இந்த முடிவை சிம்பு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X