நயன்தாராவுடனான முத்த போட்டோ.. விருப்பம் இல்லாமல் தொட்டதில்லை.. சிம்பு பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன், தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிம்பு என்றாலே சர்ச்சை, காதல், கிசு கிசு என அவரை பற்றி வராதே செய்திகளே இல்லை. இனி சிம்பு அவ்வளவு தான், சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என அனைவரும் நினைத்த நேரத்தில், அதில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்து கலக்கி வருகிறார் சிம்பு. ஜெயா டிவிக்கு சிம்பு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில், சினிமாக்குள் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை, எப்படி நடித்தேன் என்றும் தெரியவில்லை. அப்பா எப்போதுமே சினிமாவைப் பற்றி தான் பேசிக்கொண்டே இருப்பார். சினிமா பற்றி பல விஷயங்களை அவர் எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார். அம்மா, நன்றாக படிக்க வேண்டும் என நினைப்பார்கள். இதனால் அப்பாவிடமும் நிறைய அடி வாங்கி இருக்கிறேன் அம்மாவிடமும் நிறைய அடி வாங்கி இருக்கிறேன். நான் வாங்கிய அடி போல யாரும் அடி வாங்கி இருக்க மாட்டார்கள்.

Simbu STR interview
Photo Credit:

நடிகர் சிம்பு: அதுமட்டுமில்லை, எந்த பெண்ணோடு நான் பேசினாலும் அம்மா அடிப்பார்கள், அதுவும் பெல்டால் பயங்கரமாக அடி விழும். படப்பிடிப்பு தளத்தில் கூட நான் எந்த பெண்ணிடமும் அமர்ந்து பேசியது கிடையாது. காதல் என்பது மிகவும் ஒரு அற்புதமான, ஒரு அழகான, ஒரு உன்னதமான விஷயம், காதலுக்காக, அந்த அன்புக்காக பிச்சைக்காரன் போல இருந்து இருக்கிறேன். அப்படி இருந்தும் பல தோல்வி, ஏமாற்றம் எல்லாத்தையும் நான் பார்த்துவிட்டேன். ஆனால், காதல் என்னை ஏமாற்றவில்லை, நான் காதலித்தவர்கள் தான் என்னை ஏமாற்விட்டார்கள். ஏமாறுவேன் என்று தெரிந்து தான் ஏமாந்தேன். இதுவரை என் girl friend மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் நான் கூறியதே இல்லை. ஏன் என்றால், அந்த ஏமாற்றங்களால் தான் என் மனத்தையும், என்னையும் பக்குவமாக்கியது அவர்கள் தான் என்றார்.

நயன்தாராவுடன் முத்த போட்டோ: தொடர்ந்து பேசிய சிம்பு, என்னை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருக்கு. ஆனால், அதற்கு எல்லாம் நான் வருத்தப்பட்டது இல்லை. ஆனால், நயன்தாராவிற்கு முத்தம் கொடுப்பது போல வந்த போட்டோ லீக்கான போது வருத்தப்பட்டேன். நானும் நயன்தாராவும் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வந்திருப்பதாக சொன்ன போதுர, படத்தில் உள்ள முத்தக்காட்சியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், துபாய்க்கு சென்றிருக்கும் போது ஒரு புது கேமரா மற்றும் லேப்டாப் வாங்கியிருந்தோம். அந்த கேமராவை காலையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது கேசுவலாக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. ஒரு பர்சனலான மொமண்ட் அது வெளிவந்ததை நினைத்து வருத்தப்பட்டேன்.

விருப்பம் இல்லாம தொட்டதில்லை: தொடர்ந்து, செக்ஸ் கல்வி குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, அது குழந்தைகளுக்கு தேவையான ஒன்று தான். என் பையன், எந்த பெண்ணை, குழந்தையையும் தவறான நோக்கத்தோடு தொட மாட்டான். அப்படி தொட்டால் அதற்கு நான் ரெஸ்பான்ஸிபிலிட்டி என்று ஒவ்வொரு அம்மாவும் சொல்ல வேண்டும். இன்று யார் வேண்டுமானாலும், என்னை பற்றி எதுவேண்டுமானாலும் சொல்லாம், சிம்பு ஒரு ப்ளே பாய், சிம்புவிற்கு அத்தனை பெண்கள் இருக்கிறார்கள், என்று சொல்லலாம். ஆனால், நான் ஒரு பெண்ணையும் விருப்பம் இல்லாமல் தொட்டது இல்லை, இதை நான் சத்தியம் செய்து சொல்வேன் என்றார். சிம்புவின் அந்த பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X