Simbu: KH234 படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் உலகநாயகன்.

KH234 படத்தில் சிம்பு நடிக்காததற்கு காரணம்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தினை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படம் அடுத்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெறவுள்ளது. சிஜி வேலைகள் உள்ளிட்டவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் கல்கி 2898 AD படத்தில் வில்லனாக கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் சில நாட்களே அவர் கால்ஷீட் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு 150 கோடி வரை இந்தப் படத்திற்காக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு ஹெச் வினோத் நடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி சமீபத்தில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2025ம் ஆண்டில்தான் இந்தப் படத்தின் ரிலீஸ் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது STR48 படத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்துவரும் சிம்பு, KH234 படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த கேரக்டரில் நடிக்க துல்கர் சல்மானை படக்குழு அணுகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் காரணத்துடன்தான் இந்த கேரக்டரை சிம்பு மறுத்ததாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. STR48 படத்தில் தற்போது சிம்பு நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடியை அவர் வளர்த்துள்ளார். படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் பெற்றுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக அதிகமான மெனக்கெடலுடன் நடித்து வருகிறார் சிம்பு.
இந்நிலையில் கமல் -மணிரத்னம் கூட்டணியில் சிம்பு நடிக்க முடியாமல் போனதற்கு இந்த லுக் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. KH234 படத்தில் இளம் கலெக்டர் ரோலில் நடிக்கத்தான் சிம்புவை மணிரத்னம் அணுகியிருந்தார். தற்போது நீண்ட தாடி, தலைமுடியுடன் சிம்பு உள்ள நிலையில், கலெக்டர் ரோலுக்கு இந்த கெட்டப் சரியாக இருக்காது என்றுதான் சிம்பு இந்தக் கேரக்டரை மறுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சிம்புவின் STR48 படத்தில் கமல் சிறப்பான கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











