Pathu Thala: எதற்குமே நான் காரணம் கிடையாது எல்லாம் உங்கள் செயல்தான்.. ட்ரெண்டாகும் சிம்பு வீடியோ

சென்னை: பத்து தல படம் கேரளாவில் ரிலீஸாவதை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா சிம்பு?

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா சிம்பு?

வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் மூலம் கோலிவுட்டில் தரமான கம்பேக் கொடுத்த சிலம்பரசன் இரண்டாவது இன்னிங்ஸில் பயங்கர் சுறுசுறுப்புடன் காணப்படுகிறார். மாநாடு படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார் சிம்பு. அதன்படி சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இந்தப் படமும் வெற்றிப்படமாகி ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நடிகர் சிம்பு என்ற பெயரை பெறுவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்திய பத்து தல ட்ரெய்லர்

ரசிகர்களை உற்சாகப்படுத்திய பத்து தல ட்ரெய்லர்

சிம்புவுடன் கௌதம் கார்த்திக், இயக்குநர் கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கௌதம் கார்த்திக்கை மையமாக வைத்துதான் படத்தின் கதை நகரும் என்றாலும் சிம்பு ஏற்றிருக்கும் ஏஜிஆர் ராவணன் கதாபாத்திரம்தான் பேசப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளை ரிலீஸாகும் பத்து தல

நாளை ரிலீஸாகும் பத்து தல

பத்து தல படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பத்து தல படமும் ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியை சிம்பு சுவைப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் படத்தை கொண்டாடுவதற்கு எஸ்டிஆர் ரசிகர்கள் ஆவலோடு தயாராகியிருக்கின்றனர். அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் 8 மணி காட்சிக்கு செல்ல இப்போதே புக்கிங்கில் தீவிரம் காட்டிவருகின்றனர் ரசிகர்கள்.

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்பு வீடியோ

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்பு வீடியோ


இந்நிலையில் நாளை படம் வெலியாவதை ஒட்டி சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதில் பேசியிருக்கும் அவர், "அனைவருக்கும் வணக்கம். பத்து தல திரைப்படத்திர்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் , பெரிய ஓபனிங்கும் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் நானோ அல்லது எனது முந்தைய படங்கள் ஹிட்டானதாலோ கிடையாது. அனைத்திற்கும் நீங்கள் கொடுத்த ஆதரவுதான் காரணம்.

எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது

எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது

உங்களுக்கு நான் எவ்வளவு முறை சொன்னாலும் அது போதாது. மிகவும் நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது. கிருஷ்ணா நன்றாக இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று பாருங்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X