Actor Simbu: சிம்புவின் மிரட்டல் வீடியோ.. மாஸ் லுக்கில் அதிரடி காட்டும் சிம்பு!

சென்னை: நடிகர் சிம்புவின் அதிரடி ஆக்சனில் பல படங்கள் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான திரை அனுபவங்களை கொடுத்து வருகிறது. சிம்புவின் கதை தேர்வு எப்போதுமே சிறப்பானது. நடிகராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வரும் சிம்பு, குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் ஆறு மாத குழந்தையாக இருந்த போதே அவர் தன்னுடைய நடிப்பை தொடங்கிவிட்டார். தற்போது 40 ஆண்டுகளை தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர்48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. வரலாற்று பின்னணியில் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகின்றன. படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது.

Actor Simbu released fan made video of STR48 movie and expressed excitement

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு ஆறு மாத குழந்தையாக இருந்த போது தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் அவர் ஆறு மாத குழந்தையாக நடிப்பை துவங்கி தற்போது 40 வயதை தாண்டி நடிப்பை தொடர்ந்து வருகிறார். சிம்புவின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. இந்த படத்திற்காக அதிகமான மெனக்கெடல்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

Actor Simbu released fan made video of STR48 movie and expressed excitement

வரலாற்றுப் படம்: நீண்ட தலைமுடியை வளர்த்துள்ள சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை வெளிநாடுகளில் மேற்கொண்டு வருகிறார். பல மாதங்களாக இந்த பயிற்சிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த படம் அறிவிப்பை தாண்டி பல மாதங்கள் இன்னும் சூட்டிங் துவங்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் படத்திற்கான வேலைகள் மிக அதிக காலங்களை எடுத்துக் கொண்டதுதான் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இந்தப்படம் டிராப் ஆகிவிட்டதா என்று கூட செய்திகள் பரவிய நிலையில் விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ -வில்லன்: படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இருவேறு ரோல்களில் சிம்பு நடிக்கவுள்ளார். இதில் ஒரு கேரக்டர் திருநங்கை என்று கூறப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி முன்னதாக அவரது இருவேறு கெட்டப்புகளை வெளிப்படுத்தும்வகையில் போஸ்டர் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் மிரட்டலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளது. நடிகர் சிம்புவும் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் படத்தை நினைவுப்படுத்தும்வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் படம்: படத்தின் 90% சூட்டிங் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அவருடன் ஜோடி சேர பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கான செட் வேலைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டின் துவங்க உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X