நண்பனுக்கு உதவிய நடிகர் சிம்பு.. அந்த போட்டோவுக்கு பின்னணியில் இருந்த கதை இதுதானா!
சென்னை: நடிகர் சிம்பு தனது நண்பரான மகத் நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் மகத்.
நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத், அவரது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலும் நடித்திருந்தார்.

யாஷிகாவுடன் காதல்
மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார் மகத். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான யாஷிகா ஆனந்துடன் நெருங்கி பழகினார். தனக்கு வெளியில் காதலி இருந்த போதும் பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவை காதலித்தார்.

ரெட் கார்டு எவிக்ஷன்
பின்னர் சக போட்டியாளரான நடிகை மும்தாஜிடமும் தரக்குறைவாக நடந்து கொண்டார். இதனால் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மகத் தனது காதலியான பிராச்சியை திருமணம் செய்து கொண்டார்.
Recommended Video

காதல் கண்டிஷன்ஸ் அப்ளை
மகத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நடிகர் மகத் தற்போது காதல் ConditionsApply என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

சிம்புவுடன் போட்டோ
இந்தப் படத்தை லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் நடிகர் சிம்பு லிப்ரா தயாரிப்பாளர் ரவீந்தருடன் எடுத்த போட்டோ வெளியானது.

இதுதான் பின்னணியா?
இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்து சிம்புவை வைத்து படம் தயாரிக்க போகிறீர்களா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ரவீந்தருடன் சிம்பு எடுத்த போட்டோவின் பின்னணியில் உள்ள காரணம் இதுதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











