கொஞ்சமும் சோர்வடைய செய்யாத சிம்புவின் அசத்தலான 5 படங்கள்... என்னென்னன்னு பாருங்க!

சென்னை: கொஞ்சம் கூட சோர்வடைய செய்யாத சிம்புவின் டாப் 5 படங்கள் குறித்து ஓர் பார்வை..

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சிம்பு. எழுத்து, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், சிறந்த டான்ஸர் என பல முகங்களை கொண்டவர்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு நடிப்பில் வெளியாகி கொஞ்சமும் சோர்வடைய செய்யாத படங்கள் குறித்து ஓர் பார்வை..

கோவில்

கோவில்

அந்த வகையில் சிம்புவின் நடிப்பில் வெளியான கோவில் படம் சுவாரசியமான படங்களில் ஒன்று. ஹரி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். நடிகர் வடிவேலு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ராஜ்கிரன், நாசர், ரேகா என பல பிரபலங்கள் நடித்த இப்படம் இரண்டு மதங்களுக்கு இடையிலான காதலை சொல்லும் வகையில் காட்சியாக்கப்பட்டிருக்கும்.

மன்மதன்

மன்மதன்

அடுத்து மன்மதன்... சிம்பு - ஜோதிகா நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏஜே முருகன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஜோதிகா மட்டுமின்றி சிந்து துலானியும் நடித்திருந்தார். இதில் சிம்பு சீரியல் கில்லர் ரோலில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பின. இந்தப் படமும் சுவாரசியத்துக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது.

சரவணா

சரவணா

அடுத்து சரவணா.. 2006ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிம்புவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு முறை இணைந்து நடித்தனர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ஜோதிகாவிடம் சிம்பு எப்படி காதலை எக்ஸ்பிரஸ் செய்கிறார் என்பதை சுவாரசியமாக சொல்லும் வகையில் அமைந்திருந்தது. தெலுங்கு படத்தின் ரீமேக் என்ற போதும் ஒரினலைவிட தமிழில் பெரும் ஹிட்டானது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வல்லவன்

வல்லவன்

அடுத்து வல்லவன்.. சிம்பு, நயன்தாரா, ரீமா சென் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரிமா சென்னுடன் இளவயது காதல் மற்றம் சிம்பு நயன்தாரா இடையிலான காதலை சொல்லும் வகையில் காட்சியாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.

Recommended Video

சொந்த தொழில் ஆரமிக்கும் சோனியா | ACTRESS SONIA AGARWAL EXCLUSIVE | FILMIBEAT TAMIL
வாலு

வாலு

அடுத்து வாலு.. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வாலு படத்தின் மூலம் மீண்டும் பெரியத் திரைக்கு வந்தார் சிம்பு. விஜய் சந்தர் இயக்கிய இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X