தலைவன் வேற மாதிரி.. கட் பனியனில் கெத்து காட்டும் சிம்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
சென்னை: நடிகர் சிம்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்திற்காக பெருமளவு எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார்.

சோஷியல் மீடியாவில் சிம்பு
தொடர்ந்து மாநாடு படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. நடிகர் சிம்பு கடந்த ஆண்டு யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்கினார்.

தங்கை மகனுடன் கொஞ்சல்
இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தனது தங்கை மகனுடன் விளையாடும் வீடியோ அவரை கொஞ்சும் வீடியோ என பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

வைரலாகும் வீடியோக்கள்
அதேபோல் சிம்பு தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். சிம்பு என்ன போட்டோ மற்றும் வீடியோ ஷேர் செய்தாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
Recommended Video

கட் பனியனுடன் சிம்பு
இந்நிலையில் நடிகர் சிம்பு கட் பனியனுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கையில் போனை வைத்து எதையோ சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

குவியும் லைக்ஸ்
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தலைவன் வேற மாதிரி என கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் இந்த போட்டோஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











