Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பத்து தல-க்காக பயிற்சி செய்த சிம்பு.. கௌதம் கார்த்திக்கும் செஞ்சாராமே.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!
சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படத்தையடுத்து தற்போது அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இதனிடையே அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங் இம்மாதம் 28ம் தேதி துவங்கவுள்ளது.
பெல்லாரி அரண்மனையில் அடுத்த கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் டிசம்பர் 14ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த குடும்ப கப்பல் : சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு 36 வயது

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் ஒன்றாக மாறிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் கதைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தில் உடல் இளைத்து வித்தியாசமாக காணப்படுகிறார் சிம்பு. இந்தப் படமும் சிம்புவிற்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்துள்ள மஹா படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது.

28ம் தேதி துவங்கும் பத்து தல படம்
இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங் வரும் 28ம் தேதி பெல்லாரி அரண்மனையில் துவங்கவுள்ளதாக தற்போது படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவு காரணமாக சூட்டிங் தள்ளிப் போனது.

டிசம்பர் 14ல் ரிலீஸ்
படத்தில் சிம்புவிற்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சூட்டிங் துவங்கவுள்ளது.

பெல்லாரி அரண்மனையில் சூட்டிங்
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துவரும் இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் முதல் 20 நாட்கள் சூட்டிங் பெல்லாரி அரண்மனையிலும், அடுத்ததாக 10 நாட்கள் திருச்செந்தூரிலும் அடுத்ததாக மேலும் 10 நாட்கள் சூட்டிங் சென்னையிலும் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயிற்சிகள் மேற்கொண்ட சிம்பு
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு சில முன் பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு சிறப்பான நடிகர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்திற்காக பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.