அடுத்த வாரத்தில் துவங்கும் சிம்புவின் பத்து தல சூட்டிங்.. அடுத்த மாதத்தில் பிரமோஷன்!
சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் பத்து தல படத்தில் இணைந்துள்ளார் சிம்பு.
இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் டிசம்பர் 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வசூலை பெற்றுள்ளது. ஒரு சாதாரண கிராமத்து இளைஞனின் பயணமாக இந்தப் படம் வெளியான நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு படம்
தொடர்ந்து திரையரங்குகளில் இந்தப் படம் வசூலை குவித்து வருகிறது. படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் சிம்புவுடன் இணைந்து நடித்துளள நிலையில், இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சிறப்பாக பூர்த்தி செய்து வெற்றிப் பெற்றுள்ளது.

பத்து தல படம்
இந்தப் படத்தை தொடர்ந்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மீண்டும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் இணைந்துள்ள படம் பத்து தல. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். மேலும் கௌதம் கார்த்திக் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அடுத்த வாரத்தில் மீண்டும் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்த சிம்பு, தொடர்ந்து நடுவில் இடைவெளி எடுத்துக் கொண்டு, வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 14ல் ரிலீஸ்
சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் டிசம்பர் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, அடுத்த மாதத்தில் படத்தின் பிரமோஷனில் படக்குழு ஈடுபட உள்ளது.


Click it and Unblock the Notifications











