Simbu :கமல் தயாரிப்பில் சிம்பு இணையும் படம்.. சூட்டிங் எப்ப தெரியுமா.. வெளியான அப்டேட்!
சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை.
படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியும் இல்லாததை ரசிகர்கள் ஏற்காத நிலையே இருந்தது.
இந்நிலையில் கமலின் தயாரிப்பில் சிம்பு இணையவுள்ள அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பு படத்தின் சூட்டிங் அப்டேட் : நடிகர் சிம்புவின் ரீ என்ட்ரி அவருக்கு சிறப்பாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. டைம் லூப் பாணியில் வெளியான இந்தப் படத்தில் ஸ்மார்ட்டான சிம்புவை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது. இந்த இரு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன.
இந்தப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பத்து தல படமும் சிம்புவிற்கு வெற்றிப் படமாக அமைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷனும் உலகளவில் 40 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முந்தைய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில்,இந்தப் படம் பாதியளவு கூட வசூலை பெறவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று திரும்பியுள்ளார் சிம்பு. இதையடுத்து தன்னுடைய உடலை மிகவும் ஸ்லிம்மாக்கி, நீண்ட முடியுடன் அவர் காணப்படுகிறார். பத்து தல ஆடியோ வெளியீட்டின்போதுகூட, இந்த லுக்கில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். சிலர், என்ன இப்படி மாறிட்டாரே என்றுகூட கமெண்ட் செய்திருந்தனர். அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிம்பு இணையவுள்ள படத்திற்காகத்தான் அவர் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

இதனிடையே அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள STR48 படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதாகவும் அதற்காகத்தான் தற்போது நீண்ட தலைமுடியுடன் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் லொகேஷன்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங், வரும் ஜூன் 1ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் பூஜையுடன் சென்னையில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நடிகர் சிம்புவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது. கதைத்தேர்விலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நடிகர் கமலுடன் இணைந்தது தன்னுடைய கனவு நனவான தருணம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











