Don't Miss!
- News
"கூரை ஏறி முடியாதவர் வைகுண்டம் போவாராம்".. திரௌபதி முர்மு ஊரில் மின்சாரமே இல்லை.. வாசுகி விளாசல்
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Finance
முதல்நாளே இப்படியா? பாவம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 540 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரிலீசுக்கு தயாராகும் வெந்து தணிந்தது காடு படம்... அடுத்த அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
காத்து
வாக்குல
ரெண்டு
காதல்
படத்திற்கு
தொடர்
வாழ்த்து...
தொடர்
ட்விட்டர்
ட்ரெண்டிங்கில்
ஏகே62!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு சர்ச்சைக்கு பெயர் போனவர். நீண்ட காலங்களாக கோலிவுட்டில் இவர் இருந்தாலும் சர்ச்சைகளும் இவருடன் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் ஏராளமான ரசிகர்களை இவர் தனது படங்களின் மூலம் பெற்றுள்ளார். இவரது ரசிகர்களின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து காணப்படுகின்றன.

நடிப்பில் முதிர்ச்சி
ஆனால் சமீப காலங்களில் இவரது நடிப்பில் மட்டுமின்றி செயல்பாடுகளிலும் முதிர்ச்சி காணப்படுகிறது. சூட்டிங்கில் இடையூறு செய்வார், காலதாமதமாக வருவார் என்பது உள்ளிட்ட கமெண்ட்களை கடந்த காலங்களில் பெற்ற இவர் தற்போது, சமத்து பிள்ளையாக சூட்டிங்கில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.

சிறப்பான மாநாடு படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன், மாநாடு படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. குறிப்பாக மாநாடு படம் இவரது கேரியரில் பெஸ்ட் என்ற கமெண்ட்டை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் திரைக்கதையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

வெந்து தணிந்தது காடு படம்
இந்நிலையில் சிம்புவின் அடுத்த படமாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வருகிறது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு
படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் சிம்புவிற்கு சித்தி இத்னானி ஜோடியாகியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்பேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல் வெளியீடு
வரும் மே மாதம் 6ம் தேதி படத்தின் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களில் பாடல்கள் மற்றும் அதன் விஷுவல் சிறப்பாக அமையும். அந்த வகையில் இந்தப் படத்தின் பாடல் எத்தகைய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.